காதல் வலையில் கிரேஸி விழுந்து விட்டார். இது வீட்டுக்கு தெரியவர அனகாபுத்தூரில் உள்ள கருணாஸின் உறவினர் ஒருவர் வீட்டில் கிரேஸியை தங்க வைத்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்த நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைத்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் முக்குலத்தோர் புலிப்படை என்கிற பெயரில் நாடகமாடி வருகிறார். முதல் முதலில் தன்னை இலங்கை அகதியாக காட்டிக் கொண்டு திரைத்துறையில் வாய்ப்பு பெற்றார். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அவர், தனது சுயநலத்துக்காக தன்னை முக்குலத்தோராக காட்டிக் கொள்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கருணாஸின் அடிப்படை குறித்து அவருடன் இருந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவு இது. ‘’முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக வாய் கிழிய வக்கனையாகப் பேசும் கருணாஸ் யார் தெரியுமா? முக்குலத்தோருக்கும், கருணாசுக்கும் சம்மந்தமே இல்லை. அவர் முக்குலத்தோரே இல்லை. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை இவரது சொந்த ஊர். இவரது தந்தை நகைத்தொழில் செய்யும் ஆச்சாரி சமூகம். தாயார் முத்தரையர்.
இவரது தாயார் இளம்வயதில் புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச்செயலாளராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அந்த பெரியண்ணன்தான் கருணாஸின் தாயாருக்கும் குருவிக்கரம்பையை சார்ந்த நகைத்தொழிலாளி ஆனந்தன் என்பவருக்கு மணம்முடித்து வைத்தார். சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த கருணாஸ் அடையாறு இசைக்கல்லூரியில் படித்த சென்னை புழுதிவாக்கம் ராம்நகர் நலச்சங்கத்தின் தலைவர் பெஞ்சமின் என்பவரின் மகள் கிரேசியை விரட்டி விரட்டி காதலித்தார்.
காதல் வலையில் கிரேஸி விழுந்து விட்டார். இது வீட்டுக்கு தெரியவர அனகாபுத்தூரில் உள்ள கருணாஸின் உறவினர் ஒருவர் வீட்டில் கிரேஸியை தங்க வைத்தார். கிரேசியின் தந்தை அலைந்து திரிந்துவிட்டு 1998ல் உள்ளகரம், புழுவாக்கம் பேரூராட்சிதலைவர் பொன்.ஜெகதீசன் என்பவரிடத்தில் பஞ்சாயத்துக்கு வந்தார்.
கருணாசுக்கு ஆதரவாக இன்றைய புதுக்கோட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ண அரசு வந்தார். காதலர்களை அழைத்து பேசப்பட்டது. இருவரும் உறுதியாக இருந்தனர். இருவரும் மேஜர். அங்கேயே திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு மடிப்பாக்கத்தில் இரண்டு மாலையை வாங்கி வந்து கொடுத்தது நான்தான்.
கிரேசி ஆதிதிராவிட கிருஸ்துவர். கருணாசை எப்படி முக்குலத்தோர் கணக்கில் சேர்ப்பது? முக்குலத்தோர் எல்லாம் முட்டாள்கள் என நினைத்து கருணாஸ் பேட்டி கொடுக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். கருணாஸ் கொஞ்சம் அடங்கவேண்டும். இல்லையென்றால் முகத்திரை கிழிக்கப்படும். கதம்ப ஜாதியிலே பிறந்தவன் முக்குலத்தோர் வேசம் போட்டால் நம்பிவிடுவோமா?’’ என தஞ்சையை சேர்ந்த் கருணாஸின் நண்பர் க.இராசசேகர் பகிர்ந்துள்ளார்.