இதெல்லாம் ஒரு பொழப்பா? அதிமுக திட்டங்களை அப்படியே அட்டை காப்பி அடிக்கிறார் ஸ்டாலின்.. விளாசும் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Mar 9, 2021, 10:47 AM IST
Highlights

அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற  திமுக பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். அதிமுக அறிவிக்க இருந்தது முன்கூட்டியே கசிந்துவிட்டதால் திமுக அதை அறிவித்துவிட்டது என்றார்.

மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏழை மக்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்த போது முதல்வர் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். 

மேலும், மக்கள் நீதி மையம் அறிவித்த திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.4000 கொடுக்கும் திட்டம் வைத்திருந்தோம். நாங்கள் நினைத்ததில் 3 ஆயிரம் ரூபாயை உருவி, ரூ.1000 மட்டும் கொடுப்போம் என்கின்றனர். காப்பி அடிப்பது யாராக இருந்தாலும், முதலில் கூறியது நாங்கள் தான். உங்களால் காப்பி மட்டும் தான் அடிக்க முடியும், நாங்கள் செயல்படுத்துவோம் என விமர்சனம் செய்திருந்தார்.

click me!