ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவில்லை.! கூட்டணி கட்சி திடீர் அறிவிப்பு- அதிர்ச்சியில் இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jan 22, 2023, 7:22 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதியில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயார் என புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


பறிபோகும் நிலையில் இரட்டை இலை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 நாட்களுக்குள் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால் அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து அந்த தொகுதியில் ஈவிகேஎஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுயேட்சை சின்னத்தில் இரண்டு அணியினரும் போட்டியிடும் என கூறப்படுகிறது.

Latest Videos

ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த ட்விஸ்ட்!

கூட்டணி கட்சியிடம் ஆதரவு

இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், இரண்டு தரப்பினரும் தங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றனர். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன் என ஒவ்வொரு தலைவராக சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர், இந்த உட்கட்சி பிரச்சனையால் வாக்கு சிதறுவதை தவிர்க்க பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

பொது வேட்பாளர் நிறுத்திடுக

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழநாட்டில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு சார்பில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது.தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறிப்பாக தற்போது இந்த இடைத்தேர்தலில் ஒரு  இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது.    இந்த இக்கட்டான தருணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக தேசிய கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் அதனை புதிய நீதிகட்சி வரவேற்கும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன் என புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவுக்கு ‘நோ’! ஈரோடு கிழக்கு தொகுதியில் மலரும் தாமரை! அண்ணாமலை வேட்பாளர்.? டெல்லி போடும் புது கணக்கு

click me!