அதிகார துஷ்பிரயோகத்தை இனியும் பொறுக்க முடியாது... பாமகவுக்கு எதிராக கொந்தளிக்கும் டி.டி.வி..!

Published : Apr 06, 2021, 04:44 PM IST
அதிகார துஷ்பிரயோகத்தை இனியும் பொறுக்க முடியாது... பாமகவுக்கு எதிராக கொந்தளிக்கும் டி.டி.வி..!

சுருக்கம்

ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையம் இனியும் வேடிக்கை பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

வாக்களிப்பு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் ஆளு, கட்சி தலைமையிலான கூட்டணியின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அமமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் கள்ள ஓட்டு போட வந்த பா.ம.க.வினரை தட்டிக் கேட்ட அமமுக வாக்குச்சாவடி முகவர்களான 10வது வார்டு கழக செயலாளர் குணசேகர்,  8வது வார்டு கழக செயலாளர் நித்யா, மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் நெமிலி பேரூராட்சிக் கழக துணைச்செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது காவல்துறையினர் கண்ணெதிரே கொலைவெறித் தாக்குதல் நடந்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபற்றி அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக மவுனம் காத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கழக வேட்பாளருடன் வந்த கார்கள் மீதும் பா.ம.க.வினர் தாக்குதல் நடத்தியதையும் காவல் துறையினர் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையம் இனியும் வேடிக்கை பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!