சர்கார் பட பாணியில் வாக்கை செலுத்திய சென்னை முதியவர்..!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 4:05 PM IST
Highlights

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கை செலுத்த வந்த கிருஷ்ணன் என்ற முதியவர் சர்கார்' பட பாணியில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்களித்தார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கை செலுத்த வந்த கிருஷ்ணன் என்ற முதியவர் சர்கார்' பட பாணியில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்களித்தார்.

சர்கார்' திரைப்படத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய், இந்தியா திரும்புவார். ஆனால் அவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட, இந்திய தேர்தல் நடத்தை விதியின் ‘49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, தனது வாக்குரிமையைப் பெறுவார். நோட்டாவின் சட்டப் பிரிவான 49 ஓ-வைபோல், 49 P இருப்பது 'சர்கார்' படத்துக்குப் பிறகே மக்களுக்கு பரவலாகத் தெரியவந்தது.

49 P சட்டப் பிரிவின்படி, ஒருவரது வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதுகுறித்துத் தேர்தல் அதிகாரியிடம் தெளிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17 B-யில் அந்த வாக்காளர் தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் கலாசேத்திரா காலணியில் வசிக்கும் கிருஷ்ணன்(70) இன்று காலை வாக்கு செலுத்த சென்றபோது, அவரது வாக்கினை வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அவர், நான் வாக்களிக்க வேண்டும் உறுதியாக இருந்தார். இதன்பின்னர் ஆலோசனை செய்த அதிகாரிகள், டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளித்தனர்.

அதேபோல், திருச்சியிலும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, வாக்குச்சாவடி அலுவலரிடம் தான் ரமேஷ்குமார் என்பதற்கான ஆவணங்களைக் காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கைச் செலுத்திச் சென்றார்.

click me!