எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொன்னான வாய்ப்பை தரும் தேர்தல் இது.. அமைச்சர் நம்பிக்கை.

Published : Apr 06, 2021, 03:43 PM IST
எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொன்னான வாய்ப்பை தரும் தேர்தல் இது.. அமைச்சர் நம்பிக்கை.

சுருக்கம்

தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு வளர்ச்சியை நோக்கி தாய் தமிழ்நாட்டை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடைபோட வைத்திருக்கிறார்.  

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டி.குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
யில் காலை 8.50 மணிக்கு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.தந்தை போஸ், தாய் மீனாள், மனைவி தாமரைச் செல்வி, மகள் பிரியதர்ஷினி மற்றும் தம்பி யோகி உடன் அமைச்சர் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

அமைதி, வளம், வளர்ச்சி, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்கிற தாரக மந்திரத்தின் அடிப்படையில், புரட்சித்தலைவி அம்மாவின் தெய்வ வாக்குப்படி,  தமிழகத்திலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தாய் தமிழகத்தில் சேவை செய்கிற அந்த பொன்னான வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். அரசு இந்த நாட்டு மக்களுக்கு செய்திருக்கின்ற சேவைகள் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு அமைதி பூங்காவாக தமிழகம் இருக்கிறது. சாதிச் சண்டை, மதச் சண்டை அந்தச் சண்டை இந்தச் சண்டை வம்பு சண்டை என எந்த சண்டையும் இல்லாமல் ஊர்காவலனாக  இருந்து மக்களுடைய பாதுகாவலராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் இருந்து வருறார்.

 

தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு வளர்ச்சியை நோக்கி தாய் தமிழ்நாட்டை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடைபோட வைத்திருக்கிறார். பல்வேறு தடைகளை தாண்டி முதலமைச்சர் விவசாயத்தை உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். நீர் மேலாண்மையில் முதலிடத்தை தமிழ்நாடு வகிக்கிறது. நிர்வாகத் திறமையில் முதலிடத்தில் இருக்கிறது. ஆகவேதான் இன்றைக்கு தாய் தமிழ்நாட்டு மக்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 

அந்த எண்ணத்தை அந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் நடைபெறுகின்ற தேர்தல் இது.  ஒரு சாமானியன் மீது இந்த ஒட்டுமொத்த தாய்த் தமிழ்நாடும் நம்பிக்கையை வைத்திருக்கிறது. அந்த சாமானியன் தாய் தமிழ்நாட்டினுடைய தலைமகனாக, தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற முதலமைச்சராக பணியாற்றுகின்ற, கடமையாற்றுகின்ற, மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ள அந்த பொன்னான வாய்ப்பை அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு தருகின்ற தேர்தல் இந்த தேர்தல். 

 

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!