திடீர் சாமியார்கள், மந்திரவாதிகள், நரபலிகளை தடுக்க மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தேவை. கி.வீரமணி கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2022, 7:24 PM IST
Highlights

திடீர் சாமியார்கள் மந்திரவாதிகள் போன்ற நவீன 420  பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றுவது அவசியம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:-

திடீர் சாமியார்கள், மந்திரவாதிகள் நரபலிகள் போன்ற நவீன 420  பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றுவது அவசியம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:-

பெரியார் மண்ணாக இந்த திராவிட பூமியில், மூடநம்பிக்கைகளும் அதன் காரணமாக மோசடிகளும், உயிர் பலிகளும் கூட முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வருவது வேதனையளிக்கிறது. பில்லி சூனியம் என்ற பெயரில் மந்திரவாதிகள் என்னும் சாமியார்கள் என்ற பெயரிலும் பழைய கிரிமினல்களும், புதிய கிரிமினல்களும் அப்பாவி மக்களை ஏமாற்றி நரபலி வரைக்கும் செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த குழந்தையைக் கூட நரபலி கொடுத்த சம்பவம் நடந்தேறியது. 

இதையும் படியுங்கள்:  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி

திராவிடர் கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் உட்பட சுமார் 15 நாளுக்கு மேல் தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டினோம், இதேபோல விராலிமலையில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை நிகழ்த்தியதை கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியினரும் வரவேற்று பாராட்டினர். எனவே தமிழ்நாட்டில் இதற்கு திராவிட மாடல் ஆட்சியை முன்னுரிமை தந்து மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்றை தனியே சட்டமன்றத்தில் நிறைவேற்றிய செயல்படுத்த முன்வர வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்... அறிவித்தார் அமைச்சர் பொன்முடி!!

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள், போட்டி விளையாட்டுகள் தடைச்சட்டம் நிறைவேற்றுவது எப்படி வரவேற்கப்படுகிறதோ அதேபோல இந்த மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் வரவேற்கப்படும். இம்மாதிரியான சட்டத்தை கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா அவர்கள் முதலமைச்சராக முன்பு பதவியில் இருந்தபோது கொண்டு வந்து நிறைவேற்றினார். இதேபோல மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய மாநிலத்தில் மாபெரும் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் அவர்களது தொடர் முயற்சி காரணமாக அங்கு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

எனவே தமிழகத்திலும் இந்த சட்டத்தை முந்திக்கொண்டு நிறைவேற்றியிருப்ப, வேண்டும் பரவாயில்லை, காலம் தாழ்ந்தாலும் அச்சட்டை இப்போது கொண்டு வரலாம். திடீர் சாமியார்கள் மந்திரவாதிகள் போன்ற நவீன ஏமாற்று பேர்வழிகள் உருவாகாமல் தடுக்க இது போன்ற முயற்சிகளை திராவிட ஆட்சியை முன்னெடுப்பது அவசியம். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!