காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி

By Raghupati RFirst Published Oct 14, 2022, 7:06 PM IST
Highlights

இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதன்படி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

அப்போது பேசிய அவர், ‘ இமாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள  சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக உறுதி அளித்தார் பிரியங்கா காந்தி.

தொடர்ந்து பேசிய அவர், ‘வேலையற்ற இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வழங்கவும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம். மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு சரியாக பணத்தை வழங்குவது இல்லை.

பெரும் தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே பாஜக முன்னுரிமை அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பதவிகள் காலியாக உள்ளன. இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை’ என்று பாஜகவை கடுமையாக விமர்சித்தார் பிரியங்கா காந்தி.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு,  பிரியங்கா காந்தி சோலனில் உள்ள மா சூலினி கோயிலில் வணங்கினார். பிறகு நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தீம் பாடலையும் அவர் வெளியிட்டார். இமாச்சலில் உனா மற்றும் சம்பாவில் இரண்டு பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்டு பேசியுள்ள நிலையில், பிரியங்கா காந்தி நடத்திய பொதுக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் சுக்விந்தர் சுகு, மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

click me!