இந்து ராஷ்டிரத்தை உருவாக்கி கல்வி, வேலை வாய்ப்பை ஒழிக்க திட்டம்..! ஒரே தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ் தான்- மமக

By Ajmal KhanFirst Published Oct 7, 2022, 9:06 AM IST
Highlights

காந்தியை கொலை செய்த கூட்டத்தை உபா சட்டத்தில் கைது செய்வார்களா? மாட்டுக்கறி என்ற பெயரில் கொலை செய்த கும்பலை கைது செய்ய முடியுமா, சிறுமி ஆஷிபா வை பலாத்காரம். செய்தவர்களையும் ,கோவிந்த் பன்சாராவை, கௌரி லங்கேஷை கொலை செய்தவர்களை கைது செய்வார்களா? என அப்துல் சமது கேள்வி எழுப்பியுள்ளார்.

உபா சட்டத்திற்கு எதிராக போராட்டம்

உபா சட்டத்தையும், என்ஐஏ அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் பாஜக அரசை கண்டித்து மனிதே நேய மக்கள் கட்சி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆர்பாட்டத்தில் பேசிய மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, சாதி பிறப்பின் அடிப்படையில் உயர்வு,  தாழ்வு கற்பிப்பது தான் சனாதானம். மனிதனை தொட்டால் குளிக்கவேண்டும் என்ற சித்தாந்தம் தான் சனாதான சிந்தாந்தம் என தெரிவித்தார்.  தமிழகத்தில் பாஜக நுழைய முடியும் என்ற கனவு பகல் கனவுதான் என கூறினார்.  மாநில காவல்துறையினரின் அதிகாரத்தை பறிக்கும் அமைப்பு தான் என்ஐஏ என்றும்  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா ) சட்டத்தில் கைது செய்யப்ப்பட்டவர்களில் 2.2 சதவிகதம் தான் குற்றவாளிகளாக தண்டனை பெற்றுள்ளனர். இது கறுப்பு சட்டம், தடா பொடா சட்டத்தை விட கொடுமையான சட்டம் என தெரிவித்தார். 

பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு

காந்தியை கொலை செய்த கூட்டத்தை உபா சட்டத்தில் கைது செய்வார்களா? மாட்டுக்கறி என்ற பெயரில் கொலை செய்த கும்பலை கைது செய்ய முடியுமா, சிறுமி ஆஷிபா வை பலாத்காரம். செய்தவர்களையும் ,கோவிந்த் பன்சாராவை, கௌரி லங்கேஷை கொலை செய்தவர்களை கைது செய்வார்களா? யாரை கைது செய்ய இந்த சட்டம் மக்களுக்காக உழைக்க கூடியவர்களை கைது செய்வது தான் உபா சட்டம் என கூறியவர்,  நாட்டின் ஒரே தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் எனவும் குற்றம்சாட்டினார். குண்டுவெடிப்புகளை நடத்தும் மாலேகான் , மதினா பள்ளிவாசல் போன்ற குண்டுவெடிப்புகளில் இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர்.நாடாளுமன்ற உறுப்பினர் பர்க்யாசிங் தாகூர் கோட்சேவை தேசியவாதி என்று கூறும் பாசிச சிந்தனையை உருவாக்குகிறார்கள் பாஜகவினர் என தெரிவித்தார். 

41 ஆயிரம் கோடி யாருடையது.? இபிஎஸ்சை எச்சரித்த ஜேசிடி பிரபாகர்.? தமிழக அரசு விசாரிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்களா..?

சுதந்திர போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்றார்கள், ஆர்எஸ்எஸ் பங்கேற்றார்களா ?  ஆர்எஸ்எஸ் போராடியவர்கள் அல்ல; நாட்டை காட்டிகொடுத்தவர்கள் என குறிப்பிட்ட அவர், இந்து ராஷ்ட்ரயம் என்பதை உருவாக்கி அதில் சமூக நீதி இருக்காது, கல்வி , வேலைவாய்ப்பை ஒழிக்கும் வேலையை செய்வார்கள் என தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் போன்ற பாசிசி அமைப்பை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை உருவாக்குகின்றனர். இது இந்து - முஸ்லிம் பிரச்சனை அல்ல; ஒவ்வொரு இந்தியரும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை எனவே எதிர்த்து போராட தயாராக வேண்டும். நீதிமன்றத்தில் செயல்பாடு எப்படி உள்ளது என்பது உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் பேட்டியும், பாபர் மசூதி தீர்ப்பும் எடுத்துகாட்டுகிறது. மக்களின் ஜனநாயகத்தின் முன்பாக பாசிசம் வீழும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! யார் யாருக்கு எந்த பதவி..? அதிர்ச்சியில் இபிஎஸ்
 

click me!