புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டிய ஓபிஎஸ்..! யார் யாருக்கு எந்த பதவி..? அதிர்ச்சியில் இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Oct 7, 2022, 8:20 AM IST
Highlights

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை ஏற்கனவே நியமித்த ஓபிஎஸ், தற்போது மாவட்ட கழக நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி வருகிறார். 

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதற்க்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களையும் கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் உத்தரவிட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓ. பன்னீர் செல்வம் கூறிவருகிறார். ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பும் அதிமுகவிற்கு போட்டி போட்டு வருவதால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இந்தநிலையில் தமிழகம் முழுவதும் புதிய மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். இதனையடுத்து புதிய மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

புதிய நிர்வாகிகளை நியமித்த ஓபிஎஸ்

இந்தநிலையில் இதற்க்கு அடுத்த கட்டமாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு அவைத்தலைவராக கே.கே.மகாலிங்கம், இணைச்செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதே போல திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு அவைத்தலைவராக கோபாலகிருஷ்ணனையும், இணைச் செயலாளராக கவிதாவையும் இதே போல பொருளார் ஒன்றிய கழக செயலாளர் என பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.  மேலும் திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக அ. மகாலிங்கத்தையும், இணைச்செயலாளராக முத்துகுமாரியையும் நியமித்துள்ளார். இதே போல பல நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்துள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓபிஎஸ்சுடன் 100 சதவீதம் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை... ஒரே போடாக போட்ட இபிஎஸ்..!

அதிமுகவின் பலம் குறைகிறதா..?

ஏற்கனவே அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் என தனி அணி செயல்பட்டு வருவதால் தேர்தலில் தோல்வியை தழுவும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டது. தற்போது தனியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ்யால் மேலும் பின்னடைவை அதிமுக சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சிகர்கள் கூறி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்..? சீமான் எழுதிய கடிதத்தால் பரபரப்பு


 

click me!