மார்ச் மாததிற்குள் இதை செஞ்சிடுங்க...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

 
Published : Jan 26, 2018, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
மார்ச் மாததிற்குள் இதை செஞ்சிடுங்க...! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!

சுருக்கம்

Aadhar number in the ration shops does not attach the cards are fake

ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்காத கார்டுகள் போலியானவை என அறிவிக்கப்படும் எனவும்  மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

போலி ரேஷன் கார்டுகளை நீக்கும்வகையில் குடும்ப அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வாறு இணைக்கும்பட்சத்தில் ரேசன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இதுவரை சுமார் 1.85 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.இன்னும் 5 லட்சம் பேர் ஆதார் கார்டு எண்ணை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாததால் ஸ்மார்ட் கார்டு வழங்கவில்லை. 

இதனால் போலி ரேஷன் கார்டு அதிகரித்திருக்கலாம் என நினைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அதற்காக ஆதார் எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டது.

ஆனால் தற்போது மார்ச் 1 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் ஆதார் எண் இணைக்காத கார்டுகள் போலியானவை என அறிவிக்கப்படும் எனவும்  மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!