ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.

 
Published : Jan 26, 2018, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.

சுருக்கம்

We are no longer proud by ooty people

தமிழகத்தின் பெருமையாக பார்க்கப்படும் ஊட்டியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக ஒரு பிரச்னை கிளம்பியிருக்கிறது.

தமிழகத்துக்கு இண்டர்நேஷனல் பெருமையை ஈட்டித்தந்து கொண்டிருப்பது ஊட்டியும், அதிலுள்ள பொட்டானிக்கல் கார்டன் மற்றும் ரோஸ் கார்டன் ஆகியன.

 

இந்த கார்டன்களின் மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருடந்தோறும் வருமானம் வருகிறது.

இந்நிலையில் இதே ஊட்டியில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தில் கர்நாடக அரசு ஒரு பூங்காவை  திறந்திருக்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, மலர் பூங்கா மற்றும் போட் ஹவுஸ் ஆகியன தனித்தனியாக இருக்கின்றன. ஆனால் கர்நாடக அரசின் புதிய பூங்காவில் இவையெல்லாம் ஒரே இடத்தில் இருக்கின்றனவாம்.

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அங்கேயுமிங்கேயும் அலைவதற்கு தேவையில்லாமல் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் ஜாலியாக அனுபவிக்க முடியும்.
ஆக இந்த கர்நாடக பூங்காவின் வரவால் தமிழக சுற்றுலாத்துறைக்கு பெருத்த நஷ்டம் வர இருக்கிறது என்பதே நீலகிரி மாவட்ட மக்களின் குற்றச்சாட்டாக ட்இருக்கிறது. கர்நாடக அரசு இந்த பூங்காவினுள் கடைகளை அமைக்கவும், மற்ற பணிகளை செய்யவும் கர்நாடகத்தை சேர்ந்த நபர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால், ஊட்டியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் தமிழ் வியாபாரிகளின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் பிரச்னை எழுந்துள்ளது.

இதையெல்லாம் விட இந்த பூங்காவால் இண்டர்நேஷனல் சுற்றுலா பயணிகளின் பாராட்டுக்கள் கர்நாடக அரசுக்குதான் போகுமே தவிர, தமிழக மண்ணில் தமிழக அரசு சிறுமைப்பட்டுத்தான் போகும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் வேதனையாக இருக்கிறது.

எப்படி இப்படியொரு பிரம்மாண்ட பூங்காவை அமைத்துக் கொள்ள கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அனுமதியளித்தது? என்பதே எல்லோருடையகேள்வியாகவும் இருக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!