
மக்களை பற்றி கவலை கொள்ளாத தமிழக அரசு, இருக்கும் வரை எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கவனம் செலுத்துவதாக திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்களும் மாணவர்களும் போராடிவருகின்றனர். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளாத தமிழக அரசு, முடிந்தவரை சுருட்டுவதிலும் கொள்ளையடிப்பதிலுமே கவனமாக இருக்கிறது.