பாஜகவுக்கு அதிர்ச்சி... இதுதான் கடைசி சான்ஸ்... விஜயதாரணி எடுத்த பகீர் முடிவு..!

Published : Jan 20, 2026, 07:44 PM IST
vijayadharani

சுருக்கம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி சீட் கிடைக்காததும் அவருக்கு நெருடலை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பாஜகவிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் புது கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் இணைப்படில் பாஜக தீவிரம் காட் வரும் நிலையில், பாஜகவில் இணந்தும் சீட்டு தரவில்லை என்றால் பாஜகவில் இருந்து விலகுவது என்ற முடிவில் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

சிட்டிங் எம்எல்ஏ- வாக காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயதாரணி 2024 பிப்ரவரி மாதம் பாஜகவில் சேர்ந்தார். காங்கிரஸில் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு உட்பட எந்த முக்கிய பதவியும் கொடுக்கவில்லை என்கிற வருத்தத்தில் அவர் பாஜகவில் சேர்ந்தார். ஆனால் பாஜகவில் சேர்ந்து இண்டு ஆண்டுகளாகியும் இன்னும் எந்த முக்கிய பதவியும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. 2025 ஜூலை இறுதியில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலில் விஜயதாரணிக்கு இடம் கிடைக்கவில்லை. குஷ்பு போன்றோருக்கு பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், விஜயதாரணி புறக்கணிக்கப்பட்டார்.                                                             

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி சீட் கிடைக்காததும் அவருக்கு நெருடலை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர் இன்னும் பாஜகவிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். விவாத நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

2026 சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய விளவங்கோடு தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கிறார். பாஜகவில் சீட் இல்லை என்பது உறுதியானால், உடனடியாக கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்லும் முடிவில் அவர் முடிவெடுத்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?
திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு.. மலைக்கோட்டையில் மாஸ் சம்பவத்துக்கு ரெடி.. தேதி குறித்த திமுக!