
கடந்த தேர்தலில் ஸ்டாலினுக்காக கொளத்தூர் தொகுதியில் வேலை பார்த்தவர் வி.எஸ்.பாபு. புரசைவாக்கம் தொகுதியில் 2006 திமுக எம்எல்ஏ,வாகவும், வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு கொளத்தூரில் முதல்வரை எதிர்த்திருக்கிற வேட்பாளராக முன்னிலைப்படுத்தியது அதிமுக. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்கு கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு சென்றபோது மாதவரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி புகைப்படங்களுடன் பதாகைகளோடு நிறுத்தி வியக்க வைத்தார்.
இப்பேர்பட்ட வி.எஸ்.பாபுவை என்ன காரணத்தினாலோ அதிமுக மா.செ பொறுப்பில் இருந்து திடீரென நீக்கினார் இபிஎஸ். அவருக்குப் பதிலாக திருமங்கலம் மோகன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் தொகுதியில் சரியா பூத் கமிட்டி அமைக்கவில்லை, எஸ்.ஐ.ஆர் பணிகளை செய்யவில்லை என வி.எஸ்.பாபு நீக்கத்துக்கு அதிமுக தலைமை காரணம் சொல்லி இருக்கிறது. ஆனால், வி.எஸ்.பாபுவின் அசுர வேலைகளை விரும்பாத ஏதோ ஒரு தரப்பில் இருந்து வந்த பிரஷர் காரணமாகவே இபிஎஸ் தூக்கி இருக்கிறார் இபிஎஸ் என சொல்கிறார்கள்.
இதனை ஃபாலோ செய்து கொண்டு இருந்த செங்கோட்டையன் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று தன்வீட்டுக்கு கூப்பிட்டு பேசி முடித்த கையோடு பாபுவிடம், விஜயையும் போனில் பேச வைத்துள்ளார். விஜயே போனில் பேசியதில் குஷியான வி.எஸ்.பாபு, செங்கோட்டையின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு வர, அதுக்குள்ள விஷயத்தை கேள்விப்பட்டு வி.எஸ்.பாபு வீட்டில் தவெக இளைஞர் பட்டாளம் பெரிய லெவவில் திரண்டு வந்து வரவேற்றதைப் பார்த்து ஆடிப்போன பாபு, இதுவரை இப்படியொரு கூட்டத்தை பார்த்தது இல்லை என உணர்ச்சிவசப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்தபோது கட்சி நிகழ்ச்சிக்காக இவரே போய் எல்லாரையும் கூட்டிட்டு வருவாராம். ஆனால் விஜயோட போனில் பேசிய தகவல் தெரிந்ததும் பெரிய இளைஞர் இளம்பெண்கள் பட்டாளம் தன் வீட்டுக்கு வரும் என எதிர்பார்க்காத பாபு உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கி உள்ளார்.
இன்னும் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையாத பாபு, விஜய் முன்னிலையில் சேர இருக்கிறார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வி.எஸ்.பாபுவை அதிமுகவில் நீக்கியது தவெகவுக்கு பெரிய ப்ளஸ் ஆகிவிட்டது எனக்கூறியுள்ளனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் எந்தப்பதிலையும் சொல்லவில்லை என்கிறார்கள்.