ஜாதகம் பார்த்த ஆ.ராசா... செம குஷியில் குடும்பம்... மனம் வெதும்பும் திமுக தொண்டர்கள்..!

Published : Jan 08, 2021, 11:50 AM IST
ஜாதகம் பார்த்த ஆ.ராசா... செம குஷியில் குடும்பம்... மனம் வெதும்பும் திமுக தொண்டர்கள்..!

சுருக்கம்

இதுவரைக்கும் காங்கிரஸில் இருந்த கலியபெருமாள், சமீபத்தில் தான், தி.மு.க.,வில் ஐக்கியமானார் என்கிறார்கள். இப்போதே நிர்வாகிகளையும் சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டிக் கொண்டு இருக்கிறார். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலுார் தொகுதிக்கு குறி வைத்திருக்கிறார் மத்திய அமைச்சரான ஆ.ராசா. பெரம்பலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் அண்ணன் கலியபெருமாள் அல்லது அக்கா மகன் பரமேஷ்குமார் ஆகிய இருவரில் ஒருவரை களமிறக்குத் துடிக்கிறார் ஆ.ராசா. 

இதற்காக துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் இருக்கிற பிரபல ஜோதிடரிடம், ஆ.ராஜா குடும்பத்தினர் ஜாதகம் பார்த்திருக்கிறார்கள். அப்போது அரசியலில் 'கலியபெருமாளுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது’என ஜோதிடர் கூறியிருக்கிறார். இந்த ஜோதிடர் தான், மக்களவை தேர்தலில் வேலுார்  தொகுதியில், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திடம், 'அஷ்டமியில் வேட்புமனு தாக்கல் செய்தால், நிச்சயம் வெற்றி பெறலாம் எனக் கணித்துக் கூறியவர். 

இதனால், இதுவரைக்கும் காங்கிரஸில் இருந்த கலியபெருமாள், சமீபத்தில் தான், தி.மு.க.,வில் ஐக்கியமானார் என்கிறார்கள். இப்போதே நிர்வாகிகளையும் சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டிக் கொண்டு இருக்கிறார். அதேநேரம், பெரம்பலுார் தொகுதிக்கு இலவு காத்துக் கொண்டு இருந்த பலர், மனம் வெதும்பிக் கொண்டு இருக்கிறார்கள். 
 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..