இனவெறிபிடித்த சிங்கள அரசை அதிரவைத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். கைத்தட்டி வரவேற்ற பன்வாரிலால் புரோஹித்.

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2021, 11:32 AM IST
Highlights

 ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலங்கையின் சொந்த ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இலங்கையில் தமிழர்களுக்கு சுயமரியாதையை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ள கருத்துக்களை வரவேற்க தக்கது என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:  மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கையின் மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுடன் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில், நாங்கள் இலங்கையில் அனுமதி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதால் இலங்கையின் ஒற்றுமை நிலைத்தன்மை மற்றும் மாகாணங்களின் ஒருமைப்பாட்டிற்கு இந்தியா வலுவான ஒத்துழைப்பை எப்போதும் நல்கி வருகிறது. 

இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம் போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலங்கையின் சொந்த ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசமைப்பின், 13ஆவது சட்டத்திருத்தம் உட்பட இலங்கை அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் சம அளவில் இது பொருந்தும் அதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும் வளமும் நிச்சயமாக மேம்படும் எனக் கூறியுள்ளார்.

 

அவரின் இந்த பேச்சை மேற்கோள் காட்டி  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் இலங்கையிலுள்ள  தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீது இந்திய அரசின் அக்கறையை குறிக்கும் ஒரு முக்கியமான கருத்து  இது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் அவர்கள் மேலும்,  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 13ஆம் சட்டத்திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மிக தெளிவாக கூறியுள்ளதாகவும், அவரது வார்த்தைகளை தமிழக மக்கள் வரவேற்பது உறுதி என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களின் இந்த கருத்து மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அயராத முயற்சிகளை பிரதிபலிப்பதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

click me!