முதலில் உதவியாளர் இப்போது டிரைவர்..! மு.க.ஸ்டாலின் வீட்டை உலுக்கும் கொரோனா..!

By Selva KathirFirst Published Jan 8, 2021, 11:34 AM IST
Highlights

சேலம் எடப்பாடி தொடங்கி தென்மாவட்டங்கள் வரை மு.க.ஸ்டாலின் நடத்த இருந்த கிராம சபை கூட்டங்கள் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் கொரோனா அச்சம் காரணமாக இருந்துள்ளது.

சேலம் எடப்பாடி தொடங்கி தென்மாவட்டங்கள் வரை மு.க.ஸ்டாலின் நடத்த இருந்த கிராம சபை கூட்டங்கள் ஒட்டு மொத்தமாக ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் கொரோனா அச்சம் காரணமாக இருந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மழை காரணமாக கூறப்பட்டது. ஆனால் அன்றைய தினம் காலையிலேயே உச்சி வெயில் அங்கு மண்டையை பிளந்தது. ஸ்டாலின் சென்னையில் இருந்து சேலத்திற்கு கூட வரவில்லை. அப்படி இருக்கையில் மழையை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை திமுக ரத்து செய்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த மாதம் முழுவதுமே திட்டமிடப்பட்டிருந்த கிராம சபை கூட்டங்கள் அனைத்தையும் திமுக ரத்து செய்துவிட்டது.

இதற்கு காரணம் கிராம சபை கூட்டங்களில் அடுத்தடுத்து அதிமுகவினர் நுழைந்து பிரச்சனை செய்ய திட்டமிட்டிருந்தது என திமுக தரப்பில் தகவல்கள் கசிந்தன. மேலும் கிராம சபை கூட்டங்களை குறைத்துக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போல் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் புதிய வாகனம் ஒன்றை திமுக தரப்பு தயார் செய்து இசிஆரில் சோதனை ஓட்டம் நடத்தியதாகவும் கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் இரண்டு மூன்று நாட்களாக ஸ்டாலின் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஒரு சில நிகழ்ச்சிகளில் உரையாற்றினார்.

இதனை தொடர்ந்தே கிராம சபை கூட்டங்களை திமுக தலைமை ரத்து செய்தது. இதற்கு காரணம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் டிரைவருக்கு கொரோனா உறுதியானது தான் என்கிறார்கள். முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் தினேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போதே ஸ்டாலின் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். முடிவில் ஸ்டாலினுக்கு கொரோன நெகடிவ் என்றே ரிசல்ட் வந்தது. இந்த நிலையில் டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை எடுத்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் அதன் முடிவு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் நிர்வாகிகள் யாரையும் நேற்று முதல் சந்திக்கவில்லை என்கிறார்கள். ஏற்கனவே கொடுத்திருந்த அனைத்து அப்பாய்ன்ட்மென்ட்களும் கேன்சல் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் வைத்து ஸ்டாலினுக்கும் கொரோனா என்று சிலர் தகவல்களை கசியவிட்டனர். ஆனால் இதனை திமுக தரப்பு மறுத்துள்ளது. தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பான ஆலோசனையில் ஸ்டாலின் தீவிரமாக உள்ளதாகவும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைமை கூறி வருகிறது.

அதே சமயம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருந்த நிலையில் ஸ்டாலின் வீட்டில் அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் என இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது திமுகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக சொல்கிறார்கள். மேலும் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில இனி அவருக்கு மட்டும் இன்றி உடன் செல்பவர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். எனவே தான் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துவிட்டு முதலில் இருந்து ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் சொல்கிறார்கள். பொங்கல் பண்டிகையின் போது பிரச்சாரத்தை தொடங்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பு குறைவு தான் என்கிறார்கள்.

click me!