மதப்பிரச்சனைகளை தூண்டி பிளவை ஏற்படுத்தும் மோடி..! பாஜகவிற்கு தேர்தலில் பாடம் புகட்டனும்- சீறும் ஆ.ராசா

By Ajmal KhanFirst Published Mar 31, 2024, 10:43 AM IST
Highlights

மதத்தின் பெயரால் நாட்டை பிளவுப்படுத்தும் பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என ஆ.ராசா கேட்டுக்கொண்டுள்ளார். 

மக்களவைக்கு வராத மோடி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் பேசியவர், திமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். மகளிர் உரிமை தொகை மூலம் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  

நாடாளுமன்றம் கூட்டம் நடக்கும் பொழுது ஒரு நாள் கூட நாடாளுமன்ற கூட்டத்தில் மோடி கலந்து கொண்டதில்லையென தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் போது தான் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று விடுவார் எனவும் விமர்சித்தார். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை கேள்வி நேரத்தில் மோடி கலந்து கொள்ளவில்லையென கூறினார்.

மக்களை பிளவுப்படுத்த முயற்சி

இந்தியாவில் மதப் பிரச்சினைகளை தூண்டி மோடி பிளவுபடுத்துகிறார் என்றும் பாஜக அரசை இந்த தேர்தலில் இந்திய கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார்.  இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் ஆ.ராசா தெரிவித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக். சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன். காங்கிரஸ் எம்எல்ஏ கணேசன். மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

MK.Stalin: ஓட்டுரிமை இருந்தும் ஏன் 1000 ரூபாய் உரிமைத்தொகை எனக்கு கொடுக்கவில்லை.? ஸ்டாலினிடம் பெண் வாக்குவாதம்

click me!