இனி உங்ககிட்ட அப்படியெல்லாம் இருக்க முடியாது... பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஆ.ராசா..!

Published : Jul 01, 2019, 04:57 PM IST
இனி உங்ககிட்ட அப்படியெல்லாம் இருக்க முடியாது... பாஜகவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஆ.ராசா..!

சுருக்கம்

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மக்களவையில் திமுக எம்.பி., ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க, மக்களவையில் திமுக எம்.பி., ஆ.ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆ.ராசா, ’’பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு கடன் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கலாம். வேண்டுமெனில், கல்விக் கட்டணத்தையே கூட ரத்து செய்யலாம்.

ஆனால் அவர்களை 10 சதவீதம் இடஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மடைமாற்றுவதாகும். துரோணாச்சாரியார்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏகலைவன்களாக எங்களால் இனிமேலும் இருக்க முடியாது. பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் குறிப்பிடவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்வி நிறுவன ஆசிரியர் பணிக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று ஆ.ராசா குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!