கரிகாலன் சோழன் மாதிரி நம்ம எடப்பாடிதான்... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மறந்துவிட்டு புகழ்ந்து தள்ளிய அமைச்சர் வேலுமணி..!

By vinoth kumarFirst Published Jul 1, 2019, 3:54 PM IST
Highlights

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையே இல்லை என்றும், குடிநீர் பற்றாக்குறை மட்டுமே இருப்பதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையே இல்லை என்றும், குடிநீர் பற்றாக்குறை மட்டுமே இருப்பதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில் குடிநீர் பிரச்சனை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய அவர்  சென்னையில் மழையின் அளவு 68 விழுக்காடு குறைவாக இருந்த போதும், நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதான் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர் ஆதாரம் அறுகி போய்விட்டதாகவும், இதன் காரணமாக உள்ளாட்சிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரையே பிற தேவைகளுக்கும் பயன்படுத்துவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளாகவும் விளக்கம் அளித்தார். 

இதற்கு ஆக்கபூர்வமான வழிகளை கூறுவதை விடுத்து வறட்சியில் தண்ணீர் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் இல்லை என்றும் பற்றாக்குறை தான் இருப்பதாகவும் கூறினார். மேலும், கரிகாலன் சோழனுக்கு பின் குடிமராமத்து பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்துகிறார் என அமைச்சர் வேலுமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

சென்னை மாநகரில் குடிநீருக்காக ஆன்லைனில் புக்கிங் செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மூலம் தண்ணீர் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

click me!