
ரஜினியை ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சில நபர்கள் தாங்கிப் பிடிப்பார்கள். அந்த வகையில் தற்போது அவரை உயர்த்திப் பிடிப்பதோடு, அவரது பிரச்சார பீரங்கியாகவே மாறி நிற்பவர் காதிய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.
வரும் 31-ம் தேதியன்று தனது அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவிக்க இருப்பதாக ரஜினிகாந்த் சொல்லியிருக்கும் நிலையில் தமிழருவி, ரஜினிகாந்துக்காக தனது ஆதரவை கொட்டித் தள்ளியிருக்கிறார்.
“ரஜினி இத்தனை காலமாக அரசியல் பற்றிய முடிவை இழுத்தடித்தது உண்மைதான். ஆனால் இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவருடன் பல முறை பேசியதிலிருந்து சொல்கிறேன், இந்த முறை நிச்சயம் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார். இது 100% நிச்சயம்.
அன்றாடம் அறிக்கை அனுப்பும், போராட்டம் நடத்தும், மக்களை சந்திக்கும் கட்சிகள் கடந்த 2016 தேர்தலில் ஒரு சத அளவுக்கு கூட வாக்குகளை பெறவில்லை. எனவே தமிழகத்தை பொறுத்தவரை ‘கரிஷ்மாடிக்’ அரசியல்தான் எடுபடும்.
காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தனி நபர் வசீகரத்தால்தான் ஜெயிக்க முடிகிறது. அந்த வசீகரம் ரஜினியிடம் மட்டுமே இப்போது உள்ளது. அவர் அரசியலுக்கு வருவார், ஜெயிப்பார், கோட்டையில் அமர்வார், காமராஜர் ஆட்சி தருவார்!” என்று சொல்லியிருக்கிறார்.
இதே தமிழருவி மணியன் தான் ஏற்கனவே வைகோவையும், அதன் பின் வாசனையும் ‘முதல்வராக்கியே தீருவேன்! கோட்டையில் உட்கார வைப்பேன்’ என்று முழங்கினார் என்பதை இந்த நேரத்தில் கோடிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம் அன்பார்ந்த மக்கழே!
அவ்வ்வ்வ்வ்வ்.......