குக்கர் கேங்’கால் டென்ஷனான சபா... நக்கல் சிரிப்போடு நைசாக சமாதனப்படுத்திய தினா!

 
Published : Dec 29, 2017, 08:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
குக்கர் கேங்’கால் டென்ஷனான சபா... நக்கல் சிரிப்போடு நைசாக சமாதனப்படுத்திய தினா!

சுருக்கம்

Dinakaran showed the sign with his hand to be quiet and smiling

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். சபாநாயகர் தனபால், அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். பதவி பிரமாணம் நடந்த அந்த அறையில் பல்வேறு சுவையான சம்பவங்கள் நடந்தது.

தினகரன் பதவியேற்க வந்த சாலை முழுவதும் ட்ராபிக், கூட்ட நெரிசலால், அடையாறில் இருந்து காமராசர் சாலை வரை திணறிவிட்டது.  தினகரனுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவாளர்கள் என  ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ சபாநாயகர் தனபாலனின் அறைக்கு வந்தனர், தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். சில நொடிகளிலே சபாநாயகரின் அறை நிரம்பிய நிலையில், அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளின் அனைவரும் எழுந்து நிற்கவேண்டிய சூழலை தினா ஆதரவாளர்கள் உருவாக்கிவிட்டனர்.

தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் சபாநாயகர் தனபாலும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.  ஆனால், ஒரே கட்சியில் ஒன்றாக இருந்தவர்கள் மீது பழிவாங்கும் ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களும் பாதிப்புக்கு உள்ளாக்கியவரும் நேருக்கு நேர் சந்திப்பது என்பது தர்மசங்கடமான ஒன்றுதான். ஆனாலும் சபாவுக்கு பூங்கொத்து எல்லாம் கொடுத்து தினகரன் அசத்திவிட்டார்.

இதற்க்கு முன்பு, சபாநாயகர் அறையில் தினகரன் பதவிஏற்றுக் கொண்ட போது, ‘வருங்கால முதல்வர் டிடிவி வாழ்க...’ என்ற கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. என்ன செய்வதெனப் புரியாமல் விழித்த சபாநாயகர் தனபால், ‘இங்கே இப்படியெல்லாம் கத்தக் கூடாதுன்னு சொல்லுங்க...’ என்று சொல்ல.. சிரித்தபடியே அமைதியாக இருக்கச் சொல்லி கையால் சைகை காட்டினார் தினகரன்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..