மிரட்டிய பிறகுதான் இறங்கி வந்தது அ.தி.மு.க! இனிமே எல்லாம் இப்படித்தான்: அசால்ட்டாக காலரை தூக்கும் பா.ஜ.க.

By Vishnu PriyaFirst Published Oct 15, 2019, 6:18 PM IST
Highlights

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி என இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தானே களமிறங்கி இருக்கும் அ.தி.மு.க.வுக்கு பூரண ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில்தான் உறுதி செய்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியின் பிரதான தோழர் மற்றும் இந்த தேசத்தை ஆளும் கட்சி! என பல பிரம்மாண்டங்களைக் கொண்டிருந்தாலும் கூட, ஏன்  ஆதரவை அதிகாரப்பூர்வமாக சொல்ல கால தாமதம் செய்தது? என்பதே பெரிய கேள்வி. 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி என இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தானே களமிறங்கி இருக்கும் அ.தி.மு.க.வுக்கு பூரண ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில்தான் உறுதி செய்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியின் பிரதான தோழர் மற்றும் இந்த தேசத்தை ஆளும் கட்சி! என பல பிரம்மாண்டங்களைக் கொண்டிருந்தாலும் கூட, ஏன்  ஆதரவை அதிகாரப்பூர்வமாக சொல்ல கால தாமதம் செய்தது? என்பதே பெரிய கேள்வி. 

இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க இடையிலான உறவில் விரிசல் விழுந்துவிட்டது, அதை மேலும் ஊதிப்பெரிதாக்கிட அ.தி.மு.க.விலேயே சிலர் முண்டியடித்து  முயல்கிறார்கள்! என்று பரவி வரும் தகவல்தான் தாறுமாறு தகராறே. யார் அப்படி செய்கிறார்கள்? என்று கேட்டால் ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இளைஞரணியுடன் தொடர்ந்து மோதுகிறார்.’ என்று கொந்தளித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு ‘அவர் எங்கள் அமைச்சரவையின் சகாக்களுடனும் தான் வம்பிழுக்கிறார். என்ன பண்ண?’ என்று கைவிரித்துவிட்டனராம். 
ஆனாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசல் விரிந்து கொண்டே போனதும், அதை சிலர் ரசித்துக் கொண்டே இருந்ததும் தெளிவாகி இருக்கிறது.

இந்த நிலையில்தான் இரு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கான பா.ஜ. ஆதரவு அதிகாரப்பூர்வமாக உறுதியாகாமல் இருந்திருக்கிறது. இல.கணேசன் மட்டுமே ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பிரதமரின் விசிட்டுக்கு பிறகே, சில பல விவாதங்களுக்குப் பின்னரேதான் ஆதரவு உறுதியாகியிருக்கிறது. ஏன் இந்த தாமதம் என்று தமிழக பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டபோது “தாமதத்துக்கு நாங்கள் எள்ளளவும் காரணமில்லை. தேர்தலில் நிற்பது அ.தி.மு.க.தான். நியாயப்படி அவர்கள்தான் அவசரப்பட்டிருக்க வேண்டும். எங்களிடம் நேரடியாக வந்து ஆதரவை கோரியிருக்க வேண்டும். ஆனால் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணியின் மற்ற கட்சியினரை நேரடியாக தேடிச் சென்ற அ.தி.மு.க. டீம் எங்கள் பக்கம் மட்டும் வரவில்லை. சும்மா போனில் இன்ஃபார்மலாக கோரியதோடு சரி. ஏன் இப்படியான அப்ரோச்மெண்ட்? என்று கேட்டபோது ‘உங்கள் கட்சியில் தலைவர் பதவி காலியாக கிடக்கிறது. நாங்கள் யாரிடம் வந்து பேச?’ என்று சப்பைக்கட்டு கட்டி ஒரு பதில் தந்தார்கள். 

அதேவேளையில் தங்களுக்கு தேவையான விஷயங்களுக்கு மட்டும் டெல்லிக்கு படையெடுத்து, அங்கிருக்கும் எங்கள் தலைவர்களிடம் எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். இதனால் எங்களுக்கு ஆத்திரம் உருவானது. இவர்களின் செய்கைக்கு ஒரு செக் வைக்க நினைத்தோம். அதனால்தான் ‘இடைத்தேர்தலின் இரண்டு தொகுதிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுங்கள், எங்கள் வேட்பாளரை ஜெயிக்க வைப்போம். அந்த நபருக்கு அமைச்சரவையில் பங்கு கொடுங்கள்.’ என்றோம். உடனே ‘அதெப்படி ஒரு எம்.எல்.ஏ.வை வைத்திருக்கப்போகும் உங்களுக்கு அமைச்சர் பதவி?’என்றார்கள் ஏளனமாக. உடனே நாங்களோ ‘உங்கள் ஆட்சி ஓடுவதே எங்களால்தானே! ஆட்சியையே நாங்கள் உங்களுக்கு கொடுக்குறப்ப, ஒரு அமைச்சர் பதவி கொடுப்பதில் என்ன முழுகிப்போயிடும்?’ என்றோம். கூடவே ‘எங்களுக்கு இந்த ஒன்றரை வருடங்களுக்கு ஆட்சியில் பிரதிநிதித்துவம் தந்தால்,  அந்த அமைச்சரின் ஜனரஞ்சக செயல்பாட்டைப் பார்த்து, மக்களும் எங்களை அங்கீகரிப்பார்கள். அடுத்து வரப்போகும் நம்ம கூட்டணி அமைச்சரவைக்கு இது பெரிதாய் உதவும்.’ என்று சொன்னோம். 

உடனே கிலி பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு சீனியர் அமைச்சர் ‘என்னங்க இடைத்தேர்தலில் ஒரு தொகுதி, ஜெயிக்கும் எம்.எல்.ஏ.க்கு அமைச்சர் பதவி!ன்னு பெருசா மிரட்டுறீங்களே’-ன்னு சிரிச்சுட்டே கேட்டார். அது மிரட்டல் இல்லை, எங்களோட உரிமை, உங்களோட கடமை!ன்னு அவங்களுக்கு விளக்கினோம். இப்படியொரு பீதியை கிளப்புன பிறகுதான் முறையாக  பொன்னாரை வந்து சந்தித்தனர். அதன் பிறகு ஒருவழியாக ஆதரவு அதிகாரப்பூர்வமானது. ஆனாலும், இரு தொகுதிகளிலும் எங்களின் பிரசாரத்தை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அதற்கான முகாந்திரமே இல்லாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இருக்கட்டும், இதற்கும் ஒரு மிரட்டல் குண்டை போடவேண்டிதான். இனி அ.தி.மு.க. அப்ரோச்மெண்ட் இப்படித்தான் இருக்கும்.” என்று முடித்தார். 
சுத்தம்!

click me!