ஒரு மாணவியை 7 பேர் மாறி மாறி அனுபவித்த கொடூரம்.. தூக்கம் இன்றி தவித்த முதல்வர்.. 6 பேரை தூக்கியது தனிப்படை.

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2021, 5:00 PM IST
Highlights

இதுகுறித்து ஆலனஹள்ளி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது, காதலுடன் வந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது என ஊடகங்களில் செய்தி பரபரத்தன

ஒட்டுமொத்த கர்நாடகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த  பலாத்கார சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தலைகுனிவு என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ்  எஸ்.பொம்மை  கூறியிருந்த நிலையில் கர்நாடக  தனிப்படை போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். 

கடந்த 24ஆம் தேதி கர்நாடகத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ பயிலும் மாணவி தனது காதலனுடன்  கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள சாமுண்டீஸ்வரி மலைக்கு சென்று கொண்டிருந்தார். மலைக்குன்று வழியாக சென்று கொண்டிருந்த காதல் ஜோடியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட குழு பின்தொடர்ந்தது.

அப்போது அவர்கள், அந்த இளைஞரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் தன்னிடம் பணம் இல்லை என அந்த இளைஞர் தெரிவிக்கவே, உடன் இருந்த அவரின் காதலியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று புதருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தச் சம்பவம் மாலை 7:30 மணியளவில் நடைபெற்றதாலும் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த காரணத்தாலும், அந்த இளைஞனால் தனியாளார் ஏதும் செய்ய முடியவில்லை. இதற்கிடையில் அந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் அந்த இளைஞர் படுகாயம் அடைந்து மயங்கினார்.

பின்னர் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பிறகு நினைவு திரும்பி அந்த இளைஞர் தனது நண்பர்களுக்கு கொடுத்த தகவலை அடுத்து, அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலனஹள்ளி  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது, காதலுடன் வந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது என ஊடகங்களில் செய்தி பரபரத்தன. 

உடனே இதில் தலையிட்டு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தில் சட்ட ஒழுங்குக்கு விடப்பட்ட சவால், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள், நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, பாதிக்கப்பட்ட பெண் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் அவர் மைசூரில் தங்கி பயின்று வந்ததாகவும் பின்னர் தகவல் வெளியானது. 

இந்நிலையில் குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தநிலையில், சம்பவம் நடந்த போது கிடைத்த செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் கர்நாடக தனிப்படை போலீஸ் தமிழகத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் திருப்பூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த கார்பெண்டர், எலக்ட்ரீசியன், ஓட்டுனர் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவியை குடிபோதையில் இருந்த கூலித் தொழிலாளர்கள் வன்கொடுமை செய்தனர் என அந்த மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். 
 

click me!