மேலும் 10 வருடத்திற்கு நங்கூரம் போட்டு உட்கார முடிவு செய்த ஸ்டாலின். 1 வருடத்தில் 2500 கிராமங்கள். பிளான் ரெடி

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2021, 4:18 PM IST
Highlights

அவரின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப் பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து விவசாயிகளுடன் எப்போது இந்த அரசு  துணையாக இருக்கிறத என்பதை உணர்த்தும் வகையில், மேலும் ஒரு அதிரடி திட்டத்தை திமுக அரசை அவையில் வெளிபடுத்தியுள்ளது. 

மாதம் ஒருநாள் அனைத்து எம்எல்ஏ களும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் குறைகளை கருத்துக்களை கேட்க விவசாயிகளுடன் ஒரு நாள் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதிமுக அரசின் நடவடிக்கைகள், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அணுகுமுறைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

சட்டமன்றத்தில் கூட தனிநபர் புகழ்ச்சி தேவையில்லை என முதல்வர் தனது எம்எல்ஏக்களுக்கு தடைபோட்டிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது எதிர்க்கட்சியினரே பாராட்டக்கூடிய வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதேபோல் தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்காக தனி பட்ஜெட்டை தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ளது. இது விவசாய பெருங்குடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும்,  நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இன்று சட்டமன்றம் கூட்டம் தொடங்கிய உடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களின் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் தீர்மானத்தைக்  மொழிதான். பின்னர் அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அவரின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப் பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து விவசாயிகளுடன் எப்போது இந்த அரசு  துணையாக இருக்கிறத என்பதை உணர்த்தும் வகையில், மேலும் ஒரு அதிரடி திட்டத்தை திமுக அரசை அவையில் வெளிபடுத்தியுள்ளது. அதாவது மாதம் தோறும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்க விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும், மாதம் ஒருநாள் அனைத்து எம்எல்ஏக்களும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும், அப்படி செய்யும் பட்சத்தில் ஓராண்டில் 2500 கிராமங்களுக்கு அவர்கள் செல்ல வேண்டும் என முதலமைச்சர்  ஸ்டாலின் தங்களிடம் அறிவுறுத்தி உள்ளதாக  விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,  அட இது நல்ல திட்டமாக இருக்கே என பலரும் இந்த திட்டத்தை பாராட்டி வருகின்றனர். 

இந்த 5 ஆண்டுகள் மட்டுமின்றி அடுத்த 5 ஆண்டிலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வரும் நிலையில், இதுபோல மக்கள் மத்தியில் தங்கள் ஆட்சி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான பல திட்டங்களை திமுக ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய உள்ளதாகவும், கடந்த தேர்தலில் தங்களுக்கு எதிராக வாக்களித்தவர்கள் கூட எதிர் வரும் தேர்தல்களில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் அளவிற்கு மக்கள் மத்தியில் தனது செயலால் திட்டங்களால் திமுக பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்களின் தெரிவிக்கின்றனர். 
 

click me!