ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர் தாக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக அலுவலகத்தில் மோதல்
அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. எப்பொழுதும் போல் பொதுக்குழு அழைப்பிதழ், தீர்மானம் தொடர்பாக மட்டும் விவாதிக்கப்படும் என நினைத்து வந்த ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. திடீரென பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை விவகாரத்தை கையில் எடுத்தார். இதனையடுத்து வெளியே வந்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், காலத்தின் கட்டாயத்தில் ஒற்றை தலைமை அவசியம் என கூறினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டது. இதனையடுத்து 18 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் தயாரிப்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்
EPS ஆதரவாளர் மீது தாக்குதல்.. ரத்தம் சொட்ட சொட்ட ஹாஸ்பிட்டலுக்கு போகாமல் என்ன செய்தார் தெரியுமா?
ஓபிஎஸ் ஆதரவாளர் மீது வழக்கு பதிவு
இபிஎஸ்க்கு ஆதரவாக வந்திருந்த அதிமுக நிர்வாகி பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். அப்போது நீ என்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளரானா என்று கேட்டு அவரைத் தாக்கியதாக மாரிமுத்து தெரிவித்தார். இதில் வாய் மற்றும் மூக்கில் இருந்து அவருக்கு ரத்தம் வடிந்தது. இதனால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மாரிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகார் மீது தற்போது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!