AIADMK : அதிமுக பொதுக்குழு எங்க நடக்குது தெரியுமா ? ஓகே சொன்ன எடப்பாடி.. ஏற்பாடுகள் தீவிரம் !

By Raghupati RFirst Published Jun 28, 2022, 11:19 AM IST
Highlights

AIADMK : சென்னை வானகரத்தில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்ஸை கட்சியின் ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

அதிமுக பொதுக்குழு

ஆனால் இதுதொடர்பான ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீட்டு மனு மீது இரவுோடு இரவாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக அன்றைய தினம் பொதுக்குழுவில் இபிஎஸ்ஸை ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்க முடியாமல் போனது. ஓபிஎஸ் தரப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதத்தில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. 

அத்துடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின் தலைமையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு நடைபெறும் எனவும். அன்றைய தினம் கட்சிக்கு ஒற்றைத் தலைமை யாரென ஒருமனதாக முடிவு செய்யப்படும் என்று இபிஎஸ் தரப்பினர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

ஓபிஎஸ் Vs இபிஎஸ்

ஆனால், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்றுள்ளதால் அது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். அதேசமயம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு இறங்கி உள்ளது.

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை எங்கு கூட்டலாம் ? என்று தீவிர ஆலோசனையில் இறங்கியது இபிஎஸ் தரப்பு. எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி, கோவை மற்றும் சேலம் என பல்வேறு இடங்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் குழு சென்னையில் எங்கெல்லாம் நடத்தலாம் என்று பட்டியல் போட்டது. பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளார்கள்.

இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

எடப்பாடி பழனிசாமி

அந்த இடம் விஜிபி ரிசார்ட் தான். இங்கேயே அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளார்கள். இதை அடுத்து பொதுக்குழுவுக்கு ஆன இடம் முடிவாகி விட்டதால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட  தீர்மானங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஓபிஎஸ் தரப்பு இறங்கக்கூடும், அதனை முறியடிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பு.

இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு

click me!