72 ஆயிரம் டோஸ் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி சென்னை வருகை.. விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2021, 5:56 PM IST
Highlights

ஹைதராபாத்திலிருந்து  72 ஆயிரம் டோஸ் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. 

ஹைதராபாத்திலிருந்து  72 ஆயிரம் டோஸ் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 6 பார்சல்களில் 165 கிலோ எடைகொண்ட 72,ஆயிரம் டோஸ் கோவக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று காலை சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்று அங்கு சேமித்துள்ளனர். 
 

click me!