முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. அசராமல் திருப்பி அடிக்கும் ஓபிஎஸ்.!

Published : Jul 28, 2022, 06:23 AM ISTUpdated : Jul 28, 2022, 06:25 AM IST
முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. அசராமல் திருப்பி அடிக்கும்  ஓபிஎஸ்.!

சுருக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உட்பட மேலும் 7 அதிமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், வைகைச்செல்வன் உட்பட மேலும் 7 அதிமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. அப்போது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்து ஓபிஎஸ் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.  இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 பேர் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

1. என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

2. டாக்டர் P. வேணுகோபால், Ex. M.P. கழக மருத்துவ அணிச் செயலாளர்.

3. முளைவர் வைகைச்செல்வள் கழக இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்.

4. கா. சங்கரதாஸ், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்.

5.S.R. விஜயகுமார், Ex. M.P., கழக மாணவர் அணிச் செயலாளர்.

6. என். ஆர். சிவபதி, M.A., B.L., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர்.

7. டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A.,  கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்,

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அச்சச்சோ.! அதிமுகவில் 15 பேர் நீக்கம்.. எடப்பாடி அதிரடி முடிவு - யார் யார் தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!