35,836 காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.. சத்யபிரதா சாகு தகவல்.

Published : May 01, 2021, 03:50 PM IST
35,836 காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.. சத்யபிரதா சாகு தகவல்.

சுருக்கம்

10 பொது பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

நாளை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமை செயலக்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.10 பொது பார்வையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5,64,253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளது. 
இதே 2016ல் 3,30,380  தபால் வாக்குகள் வரப்பெற்றன. ஆகவே இந்த முறை தபால் வாக்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 
தமிழ்நாடு முழுவதும் 5622 - சி.ஏ. பி.எப் ( துணை இராணுவம்) தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் - 5154.

காவல்துறையினர் -25059 மொத்தம் - 35836 காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவு மையங்கள் அதிகம் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதியாகும் அங்கு 991 வாக்கு பதிவு மையங்கள் இருந்தன. குறைந்த பட்சமாக கீழ் வேலூர் - 251 ஆகும், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் வாக்கு எண்ணிக்கை மையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். 
 

 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!