செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.
தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழக பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிற்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்படுகிறார்.
ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கான மாநில நிர்வாகி பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பொன்.ராதாகிருஷ்ணன்- தேசிய செயற்குழு உறுப்பினர்கள்
* எச்.ராஜா - தேசிய செயற்குழு உறுப்பினர்கள்
* நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ - சட்டமன்ற குழு தலைவர்
* வானதி சீனிவாசன் எம்எல்ஏ - தேசிய மகளிர் அணி தலைவர்
* பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, ஏ.ஜி.சம்பத், மாநில பொது செயலாளர்கள் இராம.ஸ்ரீநிவாசன், பொன்.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி,
* எஸ்.ஆர்.சேகர்- மாநில பொருளாளர்
* வினோஜ் பி.செல்வம், மீனாட்சி நித்ய சுந்தர், ஏ.அஸ்வதாமன், எஸ்.ஜி.சூர்யா - மாநில செயலாளர்
* சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன், எஸ்.ஆதவன், ஸ்ரீகாந்த் கருனேஷ் - மாநில செய்தி தொடர்பாளர்கள்
* எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி - தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்
* ஆர்.ஏ.அர்ஜூன மூர்த்தி - மாநில பார்வையாளர் சமூக ஊடக பிரிவு
* எஸ்.அமர் பிரசாத் ரெட்டி - மாநில தலைவர், விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர்
* ஷெல்வி தாமோதரன் - மாநில தலைவர் சிந்தனையாளர் பிரிவு
* ஏ.குமரகுரு - மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்
* டாக்டர் மோகனபிரியா சரவணன் - மாநில பொது செயலாளர் மகளிர் அணி ஆகியோர் பங்கேற்பார்கள்.