அண்ணாமலை உங்களுக்கு இது இறுதி எச்சரிக்கை.. இனியும் தொடர்ந்தால் அவ்வளவு தான்.. சீறும் சி.வி.சண்முகம்

By Ajmal Khan  |  First Published Sep 17, 2023, 7:57 AM IST

எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றுள்ள நேரம் பார்த்து பேரறிஞர் அண்ணாவை திட்டமிட்டு இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்தி அண்ணாமலை பேசி உள்ளதாக சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். 


தமிழக வளர்ச்சிக்கு காரணம் யார் ?

அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,  பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை, இந்த ஆறு சதவீதம் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள்,

Latest Videos

undefined

மீதம் உள்ள 93 சதவீதம் பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிறபடுத்தப்பப்பட்ட மக்கள் இன்றைக்கு கூலித் தொழிலாளியாக வாழ்ந்திருப்பார்கள், சலவைத் தொழிலாளர்களாக, ரிக்‌ஷா  தொழிலாளராக இன்றும் நாம் வாழ்ந்திருப்போம். இன்றைக்கு  இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறிய மாநிலம். படிப்பிலும் சரி, தொழில் வளர்ச்சியிலும். இந்த வசதிகளுக்கும் இந்த வளர்ச்சியையும் காரணம் பேரறிஞர் அண்ணா

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்

ஆனால் இந்த சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்து பேசி உள்ளார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசி உள்ளார். இன்றைக்கு விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. அண்ணாமலை சொல்லும் சம்பவம் 1951இல் மதுரையில் அண்ணா பேசியதாக ஒரு சம்பவத்தை கூறுகிறீர்கள்.

அந்த சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. என்ற அடிப்படையும் இல்லை. வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ, உங்களை நீங்க அறிவு  ஜீவியாக நினைத்துக்கொண்டு எல்லாம் தெரியும் என பேசிய உள்ளீர்கள். அந்த சம்பவம் நடந்து 74 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் வயது 40. அப்போது உங்களுடைய அப்பா அம்மாக்கு திருமணம் ஆகி இருக்காது. 

அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை

இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை மாற்றி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை, அனைத்து உரிமைகளையும் சம உரிமைகளையும் பெற்று தந்து, பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்து, தமிழுக்கு உயரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணாவை பற்றி பேசியது பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த வித தகுதியும் இல்லை.

 அதிமுகவுடன் கூட்டணி இருக்கிறோம் அவரோட தேசிய தலைமை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு வரவழைத்து அருகிலேயே அமர வைத்து பேசுகிறார். என்டிஏ  கூட்டணிகளில் பாஜகவிற்கு அடுத்து உள்ள மிகப்பெரிய கட்சி அதிமுக, இதனை தேசிய தலைவர்கள் புரிந்துள்ளார்கள். ஜேபி நட்டா, மோடி, அமிஷா ஆகியோருக்கு அதிமுகவின் அருமை தெரிந்துள்ளது. 

இனியும் விமர்சித்தால்..?

ஏன் உங்களுக்கு தெரியவில்லையா, கண்ணு தெரியவில்லையா காது கேட்கவில்லையா. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவின் பெயரில் இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சிப்பதா.?  2 கோடி தொண்டர்களின் தெய்வம், அண்ணாவை தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள், அண்ணாமலைக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இனியும் இந்த போக்கு நீடித்தால், எங்கள் அம்மாவை விமர்சனம் செய்தார் இன்றைக்கு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலையின் நோக்கம் என்ன? ஒரு பக்கம் தேசிய தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக சந்திக்க வேண்டும் என கூறுகிறார்கள் நேற்று முன்தினம் கூட எடப்பாடி டெல்லிக்கு அழைத்து பேசி உள்ளார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றுள்ள நேரம் பார்த்து பேரறிஞர் அண்ணாவை திட்டமிட்டு இழிவுபடுத்தி பேசி உள்ளார். தரம் தாழ்ந்த பேசி உள்ளார் 

கூட்டணியை தோற்கடிக்க அண்ணாமலை திட்டம்

அண்ணாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும். எப்போது நீ அரசியலுக்கு வந்தாய்.  அரசியல் பற்றி உனக்கு என்ன தெரியும். அண்ணாமலையின் எண்ணம் எல்லாவற்றையும் பார்க்கும்பொழுது கூட்டணியில் இருந்து கொண்டே எங்களுடைய தலைவர்களை விமர்சிப்பதை பார்த்தால் மனதில் ஏதோ உள்நோக்கம் வைத்துக் கொண்டுள்ளார். இந்த கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்று திட்டமிட்டு திமுகவோடு கைகோர்த்துக்கொண்டு செயல்படுகிறார் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கொடநாடு வழக்கு: கனகராஜின் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
 

click me!