திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்த தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமியிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் நிறுவனர், தலைவர் வீரலட்சுமி இன்று திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்தார். அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் கோவிலுக்கு வந்த வீரலட்சுமியை வழிமறித்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
undefined
இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் அசாதாரண கூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வீரலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், சகோதரி விஜயலட்சுமிக்கு இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் பட்சத்தில் ஆயிரம் நபர்களுக்கு அன்னதாம் வழங்குவதாக வீரராகவ பெருமாளை வேண்டியிருந்தேன். அதன் அடிப்படையில் இன்று அன்னதானம் வழங்குவதற்காக நான் வந்துள்ளேன்.
விநாயகர் சிலையை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் மோதல்; விஸ்வ இந்து அமைப்பு பொறுப்பாளர் கைது
கடந்த 2 தினங்களுக்கு முன்பு சீமான், சகோதரி விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு சமாதானம் பேச முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. அது தற்போது உறுதியாகி உள்ளது. சீமான் விஜயலட்சுமியின் சகோதரிக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும். மேலும் சீமான் தனது கட்சி உறுப்பினர்களை அடக்கி வைக்க வேண்டும். வன்முறை தேவையற்றது என்று தான் நாங்கள் அமைதியாக செல்கிறோம். பதிலுக்கு நாங்களும் ஆட்களை இறக்கி சண்டையிட்டால் உங்களால் தாக்குபிடிக்க முடியாது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; எம்.பி.களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்
நான் என் ஜாதிக்காரர்களிடம் சொன்னால் சீமானால் வடமாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது. சீமான் தனது கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.