டெல்டாக்காரன் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் விவசாய நிலங்கள் கருகுகிறது. காவிரி நீருக்காக இந்தியா கூட்டணியில் சண்டையிட முதலமைச்சருக்கு திராணி இருக்கா ? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
உலகத்தில் 7வது பெரிய கட்சி
பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மதுரை மாநகர் அ.தி.மு.க., சார்பில் மதுரை கோ.புதூர் பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், உலகில் 7-வது பெரிய கட்சி அதிமுக, ஆசிய கண்டத்தில் 3-வது பெரிய கட்சி தான் அ.தி.மு.க., ஆனால் அதிமுகவை எம்ஜிஆர் துவங்கும் போது கருணாநிதி கிண்டல் செய்தார், இந்த கட்சி இருக்காது என்று. தற்போது மிகப்பெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. ஸ்டாலின், உதயநிதி அடுத்ததாக இன்பநிதி வந்தா கூட அ.தி.மு.க.,வை யாராலும் அசைக்கமுடியாது.
இந்தியா கூட்டணியில் சண்டையிட தயாரா.?
மதுரையின் வளர்ச்சிக்கு அதிமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. மதுரையில் இன்னும் 50 ஆண்டிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எடப்பாடியார் திட்டம் தீட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரையில் பல்வேறு பாலங்களை கொண்டுவந்துள்ளார். தெப்பகுளத்தில் தண்ணீர் நிறைத்துக் கொடுத்தார். இது போன்று பல்வேறு திட்டங்களை எடப்பாடி கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
காவிரி பிரச்னை தீர்ப்பது யார் ?. டெல்டாகாரன் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் விவசாய நிலங்கள் கருகுகிறது. காவிரி நீருக்காக இந்தியா கூட்டணியில் சண்டையிட திராணி இருக்கா ? மதுரை அதிமுக பொன்விழா மாநாடு. மோடி ஜியே அதனை வியந்து பார்த்துள்ளார். அமலாக்கத்துறை சோதனையால் முதல்வர் தூங்குகிறாரோ என்று தெரியவில்லை என செல்லூர் ராஜூ விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலை உங்களுக்கு இது இறுதி எச்சரிக்கை.. இனியும் தொடர்ந்தால் அவ்வளவு தான்.. சீறும் சி.வி.சண்முகம்