டெல்லி தீ விபத்தில் 27 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

By vinoth kumarFirst Published May 14, 2022, 10:04 AM IST
Highlights

 டெல்லி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

டெல்லி வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. 4 மாடி கட்டிட வளாகத்தில் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் வேகமாக பரவியது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  24 தீயணைப்பு வாகனங்கள் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Extremely pained by the tragic loss of so many lives in accident.

I extend my heartfelt condolences to the families of victims and wishing the injured a speedy recovery.

— M.K.Stalin (@mkstalin)

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டெல்லி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது  வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

click me!