நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பமா.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

By Ajmal Khan  |  First Published Feb 19, 2024, 10:06 AM IST

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 21ஆம் தேதி 1ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதிமுக சார்பாக விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன் கிழமை முதல் 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, 

Latest Videos

undefined

விருப்ப மனு தேதி அறிவிப்பு

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கவதாக கூறியுள்ளார். மேலும் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், பொதுத்தொகுதிக்கு 20ஆயிரமும், தனி தொகுதிக்கு 15ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

யாருடன் கூட்டணி.? 2 நாட்களில் நல்ல செய்தி சொல்லுறேன்.. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் தகவல்
 

click me!