
பண மோசடி புகாரில் எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபாவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சில நாட்களுக்கு முன்பு பேரவை ஒன்றை தொடங்கினார். அதற்கு எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை என பெயர் சூட்டி கொடியையும் அறிமுகபடுத்தினார்.
இதற்கு உறுதுணையாக அவரது கணவர் மாதவனும் அவருடன் இருந்தார். ஆனால் பேரவையில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவின.
இந்நிலையில், தீபாவிற்கும் மாதவனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நேசபாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தீபா 20 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து தீபா பணம் வசூலித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.