2.1/2 லட்சம் டச்... அவருக்கு தெரியாது விட்டுடுங்க... ராஜா கண்ணு ஊரில் போராட்டம்... அலற விட்ட வன்னியர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2021, 5:34 PM IST
Highlights

வன்னிய இளைஞர்கள் இந்த அறிக்கையை ஏற்காமல் தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு என்ன காரணம்? 

ஜெய் பீம் சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர ஓய்ந்தபாடில்லை. உண்மைச்சமப்வம் நடந்ததாக கூறப்படும் முதனை கிராமத்தை சேர்ந்த மக்கள் இன்று ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அதேபோல் ட்விட்டரில் #SuriyaHatesVanniyars என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். தற்போது வரை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

அதனை 2.50 லட்சம் பேர் ரிட்விட் செய்து வருகின்றனர். இதனையடுத்து ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இந்தப்பட சர்ச்சைகள் குறித்து சூர்யாவுக்கும், இந்தப்படத்தில் காட்டப்பட்ட அக்கினி கலசம் காலண்டருக்கும் சம்பந்தமில்லை. அனைத்துக்கும் தானே பொறுப்பு என வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தனை திருப்பங்களும் இன்று ஒரே நாளில் நடந்துள்ளது. 

ஆனாலும், இன்னும் வன்னியர்களின் ஆதங்கம் குறையவில்லை. ‘’ஞானவேல் சொல்லும் கதை எல்லாம் சும்மா. அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் ஊட்டும் கதை. வன்னிய இளைஞர்கள் இந்த அறிக்கையை ஏற்காமல் தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு என்ன காரணம்? இதற்கு பின்னால் யார் இருப்பது? போன்ற வினாக்களை எழுப்பி போராட்டத்தை வலுப்படுத்தினால் பலரின் உண்மை முகம் வெளியில் வரும். இந்த வருத்தம் வள்ளுப்பூண்டு கதை எல்லாம் வேணாம். எதற்காக அக்னிக்கலசம் இடம்பெற்றது? ஏன் வன்னியர்கள் மீது இத்தனை வன்மம்? போன்ற பல்வேறு வினாக்களுக்கு பதில் சொல்லிவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனக் கூறுகின்றனர்.

நடிகர் சூர்யாவிற்கு அகில இந்திய அளவில் க்ஷத்ரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெய்பீம் திரைப்படம், வன்னிய குல க்ஷத்ரியர்களை இழிவுபடுத்துவதாக அச்சமூகத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக வன்னியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதுடன்,  ஆர்ப்பாட்டங்களும் செய்து வருகின்றனர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்திய அளவில் புகழ்பெற்ற க்ஷத்ரிய சங்கங்களில் ஒன்றான ஸ்ரீ ராஜ் புத் கர்னி சேனாவும் நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங்  மகராணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதில், ஜெய்பீம் படத்தில்  க்ஷத்திரியர்களை மோசமாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இப்படத்தில் படக்குழுவினர் க்ஷத்ரியனை வில்லனாக சித்தரித்துள்ளனர்.  உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், ஹீரோ மற்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் போலீஸ் ஐஜி கதாபாத்திரங்களுக்கு அசல் பெயரை வைத்துள்ளதாகவும், ஆனால் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியுள்ளனர். 

 குருமூர்த்தியின் இயற்பெயர் அந்தோணிசாமி (கிறிஸ்தியன்).  அவரது திரைப் பெயர் குருமூர்த்தி என்று வைக்கப்படுவதால், அவர் பிரபலமான க்ஷத்திரியத் தலைவரான குரு என்று அழைக்கப்படுகிறார். மேலும் மற்றொரு காட்சியில், வில்லன் வீட்டில் அக்னி கலசம் நாட்காட்டியை வைத்திருந்தார், அதன் மூலம் வில்லன் அக்னிகுல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நேரடியாகக் குறிப்பிடுகிறார்.  இது 25 கோடி க்ஷத்திரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.  படத்தில் தேவையில்லாமல் க்ஷத்திரிய சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலை ராஜ்புத் கர்னி சேனா கடுமையாகக் கண்டிக்கிறது.

Condemnation & protests against , erupted from Village where people en masse had stood by & helped Parvathy Ammal till the end during human rights atrocities meted out to her husband & her by inhuman SI of the day. pic.twitter.com/1XbjI01AWr

— Public Health Champion (@phc_36)

 

மேலும் பாதிக்கப்பட்ட ராஜா கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நீதிக்காகப் போராடிய க்ஷத்ரியரான கோவிந்தனைப் பற்றி குறிப்பிடவில்லை.  
25 கோடி க்ஷத்ரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தயாரிப்பாளர் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்புத் கர்னி சேனா வலியுறுத்தியுள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.  

click me!