சொந்த கட்சிக்கு எதிராக போராட்டமா? அண்ணாமலையை கிண்டல் செய்த பழனிவேல் தியாகராஜன்!!

By Narendran SFirst Published Nov 21, 2021, 5:33 PM IST
Highlights

சொந்தக் கட்சியையும் கூட்டாணி கட்சிகளையும் எதிர்த்து போராட்டம் நடத்துகிறாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கிண்டல் செய்யும் வகையில் நிதியமைச்சர் பி.தியாகராஜன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

சொந்தக் கட்சியையும் கூட்டாணி கட்சிகளையும் எதிர்த்து போராட்டம் நடத்துகிறாரா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நிதியமைச்சர் பி.தியாகராஜன் கிண்டல் செய்துள்ளார். தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.  ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தனி நபர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் தனித்தனியாக ட்வீட் செய்வது அல்லது பொது விவகாரங்களில் கருத்து வெளியிடுவது என்று பதிவுகளை போடுவதும் அதற்கு பாரதிய ஜனதா கட்சி அல்லது அதனுடன் தொடர்புடைய கட்சியினர் எதிர்வினையாற்றுவதும் தொடர்கதையாகி விட்டன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டரில், இந்து என்பது புவியியல் அடையாளம். யானை ஒன்று ஆப்பிரிக்காவில் இருந்தால், அது ஆப்பிரிக்கன். இங்கு நாம் நாட்டில் இருக்கும் மண்புழு ஒரு இந்து" எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிடிஆர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஆப்பிரிக்கா ஒரு கண்டம்; இந்தியா ஒரு நாடு & குடியரசு (ஜக்கி வாசுதேவ் ட்வீட்டில் இந்த நிலம் இந்தியாவைக் குறிக்கிறது); இந்து என்பது மதம் & நம்பிக்கை. அதேநேரம் யானை முதுகெலும்பு உள்ள ஒரு பாலூட்டி; மண்புழு என்பது முதுகெலும்பில்லாது & நிலத்தில் வாழக்கூடியது. அதேபோல Charlatan என்பவர் உண்மையில் தனக்கு இல்லாத சிறப்பு அறிவை தனக்கு இருப்பதாகக் கூறிக் கொள்பவர்" எனப் பதிவிட்டார். ஜக்கி வாசுதேவ்விற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல் அவரது பல டிவிட்டர் பதிவுகள் சர்ச்சைகளை கிளப்பின. இதற்கிடையே சென்னையில் தொடர்ந்து 17வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை மத்திய அரசு தீபாவளி தினத்தன்று குறைத்தது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் விலை மாற்றமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது. முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், வருகிற நவம்பர் 22 ம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து இந்த போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் தமிழக நிதியமைச்சர் பி. தியாகராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில்,, என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தது. அப்போது,ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ என்று தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவை பலரும் ரீடிவீட் செய்து தமிழக பாஜகவினரை கிண்டல் செய்து வருகின்றனர்.

click me!