தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு2 பக்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2002 ஆம் ஆண்டில், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.தேரா சச்சா சௌதா ஆன்மிக அமைப்பின் தலைவராகத் திகழும் ராம் ரஹீம் சிங், 15 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து, தற்போது தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதையடுத்து ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் மூண்டுள்ளது. பாஞ்சாபில் சாமியாரின் ஆதரவாளருக்கும், போலிசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பெட்ரோல் பங்கில் தீ வைத்து எரிப்பதும், வாகனங்களை உடைப்பதும் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக துணை ராணுவ படையினரை அனுப்ப உள்ளது மத்திய அரசு.மேலும் இந்த கலவரம் உத்திரபிரதேச மாநிலத்திற்கும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதனிடியே நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக தொடர்ந்து காயமடைந்த பொதுமக்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது