வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் ‘யாஷ்’ புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் ‘யாஷ்’ புயல் காரணமாக 12 சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஷ் புயல் மே 22 ஆம் தேதி வங்க விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் 25ம் தீவிரமாகி, மே 26 மாலை வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரைகளை அடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மற்றும் கடல் நிலைமைகள், வெப்பச்சலனத்திற்கு உகந்த சூழல் மற்றும் கடல் மேற்பப்பின் வெப்பநிலை வெப்பநிலை போன்றவை காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு-மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள பகுதிகளில் மே 22ம் தேதி முதல் மேகமூட்டத்திற்கு சாதகமான சூழல் உருவாகிறது.
இதனால் குறைந்த அழுத்த பகுதியாகி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அருகிலுள்ள கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா ஆகியவற்றில் உருவாகிறது.
மே 24 மற்றும் 26 ஆம் தேதிகளில் மத்திய வங்க விரிகுடாவின் முக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு வங்க விரிகுடாவிலும், ஒடிசா - மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரையிலும் மே 25 முதல் 27 வரை பலத்த புயல் காற்று வீசும்" என்று வானிலை மையம் அறிவித்தள்ளது. இதனையடுத்து, நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.