இனி 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கொண்டாட்டம்....ரூ. 1000 கோடி ஒதுக்கீடு..!

First Published Mar 16, 2017, 12:55 PM IST
Highlights
1000 cr alloted for 100 days working plan said finace minister jayakumar


2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருவன.

அதில், கிராமப் புறமக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2017-18 ஆண்டில் ஏழை பெண்களுக்கு 12 ஆயிரம் கறவை மாடுகளும், 1.50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளும் வழங்க ரூ.182 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு ரூ. 469 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை அமைத்தல், புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ. 10 ஆயிரத்து 67கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

click me!