சூரத்தில் பெண் பயிற்சி எழுத்தர்கள் 10 பேரை ஒரே அறைக்குள் நிர்வாணம்.!! கொதிக்கும் தொழிற்சங்கம்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 21, 2020, 11:55 PM IST
Highlights

குஜராத்தின் பூஜ் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி மாணவிகள் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க விடுதி அதிகாரிகள் அவர்கள்  உள்ளாடைகளை அகற்றிய சம்பவம் இன்னும் அடங்குவதற்குள்,சூரத் நகராட்சி மருத்துவமனையில் பயிற்சி எழுத்தர்கள் நிர்வாணமாகவும்,திருமணம் ஆகாத பெண்கள் கூட கர்ப்பமாக இருக்கிறார்களா? என்று பரிசோதித்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

T.Balamurukan

குஜராத்தின் பூஜ் நகரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரி மாணவிகள் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க விடுதி அதிகாரிகள் அவர்கள் உள்ளாடைகளை அகற்றிய சம்பவம் இன்னும் அடங்குவதற்குள்,சூரத் நகராட்சி மருத்துவமனையில் பயிற்சி எழுத்தர்கள் நிர்வாணமாகவும்,திருமணம் ஆகாத பெண்கள் கூட கர்ப்பமாக இருக்கிறார்களா? என்று பரிசோதித்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

குஜராத் மாநிலம், சூரத் நகராட்சி மருத்துவமனையில், பெண்கள் வார்டில் மருத்துவ பரிசோதனைக்காக பெண் பயிற்சி எழுத்தர்கள் தேர்வு சூரத் நகராட்சி மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மருத்துவமனையில் நடந்தது. அந்த தேர்விற்கு வந்திருந்த  சுமார் 10 பெண் பயிற்சி எழுத்தர்கள் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது. இப்பிரச்சனை அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 இச்சம்பவம் குறித்து சூரத் தொழிற்சங்கம் ஊழியர்கள் பேசும் போது.., " மருத்துவ பரிசோதனைக்காக வந்த பயிற்சி பெண் எழுத்தர்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்கள் 10 பேரையும் ஒரே நேரத்தில் அழைத்து நிர்வாணமாக நிற்க வைத்ததுள்ளார்கள்.ஒவ்வொரு பெண்களும் கூச்சப்பட்டிருக்கிறார்கள்.கூனி குறுகி மனவேதனையோடு தங்களது கர்ப்பை காத்து நின்றிருக்கிறார்கள்.இது போன்ற ஈனச்செயலை பெண்மருத்துவர்கள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அனைத்து பயிற்சி ஊழியர்களும் தங்கள் பயிற்சி காலம் முடிந்ததும் வேலைக்கான தகுதியை நிரூபிக்க உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அதன் அடிப்படையில் இந்த மருத்துவ சோதனை நடந்திருக்கிறது.பயிற்சி ஊழியர்கள் கட்டாய சோதனைக்கு எதிரானவர்கள் அல்ல என்றாலும், மகளிர் மருத்துவ வார்டில் பெண் ஊழியர்களுக்கு பின்பற்றப்பட்ட முறை சரியானதல்ல.என் ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது ஷேக் கூறியதாவது:-

"பரிசோதனையின் போது கர்ப்பம் குறித்த அபத்தமான கேள்விகளை கேட்டு  பெண் பயிற்சி எழுத்தர்கள் பெண் மருத்துவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.மருத்துவர்கள் கர்ப்பத்தைப் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பதை நிறுத்த வேண்டும். அந்தக் குழுவில் உள்ள திருமணமாகாத பெண்கள் கூட அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதைச் சரிபார்ப்பதற்கான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இது பெண்களுக்கு நடக்கும் அநீதியாகவே கருதப்படுகிறது. பெண் ஊழியர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்".என்றார்.

இந்தகுற்றச்சாடு குறித்த விசாரணைக்கு சூரத் நகராட்சி ஆணையர் பஞ்சனிதி பானி  உத்தரவிட்டு உள்ளார்.  மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து குற்றச்சாட்டுகளை விசாரித்து 15 நாட்களில்  அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளார்.

click me!