" தமிழகம் வளர்கிறது" .. ஸ்டாலினின் காலை சிற்றுண்டி திட்டத்தை மனமார பாராட்டிய ஜி.கே வாசன்..

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2022, 1:38 PM IST
Highlights

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும், தமிழகம் வளர்கிறது என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் தொடங்கி வைத்திருப்பது குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும், தமிழகம் வளர்கிறது என்றும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் தொடங்கி வைத்திருப்பது குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த தினமான நேற்று தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல்5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாணவர்களுடன் அமர்ந்து காலைச் சிற்றுண்டி சாப்பிட்டார்.

அப்போது பேசிய அவர், எத்தனையோ ஏழை எளிய குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கூடத்திற்கு வருகின்ற நிலை உள்ளது, அப்பசிப்பிணியை  நீக்கிவிட்டால் மாணவர்கள் அதிக அளவிற்கு பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். நல்ல முறையில் பாடம் கவனிப்பார்கள், ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளாக வளர்வதற்கு இது துணை செய்யும் என பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்:   காலை சிற்றுண்டி திட்டம்.. நெல்லை மாநகரில் 22 பள்ளிகளில் ஆட்சியர் தொடங்கி வைப்பு..

தமிழக முதலமைச்சரின் திட்டத்தை அரசியல் கட்சி தலைவர்களும் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் இத்திட்டத்தை வரவேற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஜி.கே வாசன் சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

இதையும் படியுங்கள்: ஸ்டாலினுக்கே டப் கொடுத்த கனிமொழி.. நேற்று அண்ணன் இன்று தங்கை, உப்புமா சாப்பிட்டுக் கொண்டே போட்டோவுக்கு போஸ்..

தமிழக மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை போராடியவர் ராமசாமி படையாட்சியார். தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இந்த அரசு சாமானிய மக்களைப் பற்றி துளியும் கவலை கொள்ளாத அரசாக உள்ளது, மின் கட்டண உயர்வை எதிர்த்து வருகிற 19ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேலம் மாநகரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தவுள்ளது.

ராகுல் காந்தியின் நடைபயணம் நாடு முழுவதும் செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் கட்சியை மீட்பதற்க்தானேயொழிய அது நாட்டிற்காக அல்ல, இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி என்றார். அப்போது தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி உணவு திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காமராஜரின் அடித்தளத்தில் தமிழகம் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என இத்திட்டத்தை வரவேற்று பாராட்டினார்.
 

click me!