"விஜயவாடா துறைமுகம்" உளறி கொட்டிய பொன்முடி... இதுகூட தெரியாதவர் உயர்கல்வி அமைச்சரா? டார்டாரா கிழிக்கும் பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2022, 2:37 PM IST
Highlights

விஜயவாடாவில் துறைமுகம் இருப்பதாகவும், அங்கிருந்து  தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது  நகைப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜயவாடாவில் துறைமுகம் இருப்பதாகவும், அங்கிருந்து  தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது  நகைப்பை ஏற்படுத்தி வருகிறது. கடல் இல்லாத ஊரில் துறைமுகம் எப்படி வந்தது? அதைப் பொன்முடி எங்களுக்கு காட்ட வேண்டும் என பலரும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வறுத்தெடுத்து வருகின்றனர்.

வழக்கமாக ஊடக விவாதங்களில் பாஜக, அதிமுக போன்ற கட்சியினரே சரியான தரவுகள் இல்லாமல் பேசி அகப்படுவது வாழக்கம், ஆனால் திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப ஸ்மார்ட், மிகச் சிறந்த பேச்சாளர்கள் என்ற பிம்பம் தெரிந்தோ தெரியாமலோ இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக  திமுக அமைச்சர்களின் ரசக்குறைவான பேச்சுக்கள், நடவடிக்கைகள், மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்து வருகிறது. திமுக அமைச்சர்களின் கண்ணியக் குறைவான  நடவடிக்கைகள் நகைப்பை ஏற்படுத்தி வருகிறது, இதற்கு அதிமுகவே எவ்வளவோ மேல் என்று பேசும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் உள்ளது.

இதில் மிக முக்கியமானவர் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என்றே கூறலாம், உயர்கல்வித்துறை அமைச்சர் என்பவர் அனைத்து விஷயங்களிலும் பாண்டித்தியம் பெற்றவாரக இருக்கவேண்டும், எல்லாத்துறைகளிலும் விசாலமான அறிவு பெற்றவராக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் அண்டை மாநிலங்களின் பற்றிய தகவல்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும், ஆனால் இது எதுவுமே தன்னிடம் இல்லை என்பதை பொன்முடி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நிரூபித்து காட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: மதவாதிகளுக்கு மூளை குறைவு.. தனக்கு எதிராக வெளியான அவதூறு வீடியோவால் கொதித்த நிதி அமைச்சர்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மாணவர்கள் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். போதைப் பொருளை தடுக்க தமிழக அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, மத்திய அரசும் அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும், போதைப்பொருள் இந்தளவுக்கு பரவி இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என்றார்,

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டினார், குஜராத்தில் உள்ள துறைமுகம் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது, தனியார் துறைமுகம் மூலம்தான் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன, இந்த கடத்தலில் குஜராத் முத்ரா துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. துறைமுகங்களை தனியார்மயமாக்கலால்தான் போதைப்பொருட்கள் வளர்ந்துள்ளது, அதனால்தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகரித்துள்ளது,

இதையும் படியுங்கள்: நீட் தேர்வில் விலக்கு தேவை.. அமித்ஷா முன்னிலையில் கெத்தாக திராவிடத்தை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்.!

குறிப்பாக விஜயவாடா துறைமுகம் வழியாகத்தான் போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றது, முத்ரா துறைமுகத்திற்கும் விஜயவாடா துறைமுகத்துக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என அவர் பேசினார். அவரின் இந்த பேச்சு தான் இப்போது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது விஜயவாடா என்பது நான்கு புறமும்  நிலம் சூழ்ந்த பகுதி, அதனால் அங்கு கடல் இல்லை, அதனால் அங்கு துறைமுகம் இல்லை, ஆனால் அமைச்சர் உண்மைக்கு மாறாக ஊடகங்கள் மத்தியில் விஜயவாடாவில் கடல் இருப்பதைப் போன்றும், அங்கு துறைமுகம் இருப்பதைப் போன்றும், அங்கிருந்து கஞ்சா கடத்தப்படுகிறது என்றும், இல்லாத ஒன்றை கூறியுள்ளார்.

 

4 பக்கமும் நிலம் சூழ்ந்துள்ள விஜயவாடாவில் துறைமுகம் இருக்கிறது, அங்கு இல்லாத துறைமுகம் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி.

இந்த லட்சணத்தில் கல்வித்துறை அமைச்சர் இருந்தால் மாநில கல்வி நிலை என்னவாகும் நண்பர்களே?

"திராவிட மாடல்" கல்வியோ? pic.twitter.com/4W0aRuGmEO

— SG Suryah (@SuryahSG)

அவரின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவருக்கு இது கூட தெரியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநில செயலாளர், எஸ்.ஜி  சூர்யா நான்கு பக்கம் நிலம் சூழ்ந்துள்ள விஜயவாடாவில் துறைமுகம் இருக்கிறது, அங்கு இல்லாத துறைமுகம் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது, என்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த லட்சணத்தில் கல்வித்துறை அமைச்சர் இருந்தால் மாநிலத்தின் கல்வி நிலை என்னவாக இருக்கும். நண்பர்களே திராவிட மாடல் கல்வியே.?? என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே போன்ற கருத்தை தனது அறிக்கையின் வாயிலாக பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விஜயவாடா துறைமுகத்திலிருந்து போதைப்பொருட்கள் வருகிறது என அமைச்சர் பொன்முடி கூறுகிறார். ஆனால் நான் படித்தவரை விஜயவாடாவில் கடலே இல்லை, தெரியாத விஷயத்திற்குள் அமைச்சர் போகக்கூடாது, எல்லாவற்றையும் அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த கருத்தை மேற்கோள்காட்டி, அமைச்சரின் அறியாமையை எண்ணி பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். 
 

click me!