மதவாதிகளுக்கு மூளை குறைவு.. தனக்கு எதிராக வெளியான அவதூறு வீடியோவால் கொதித்த நிதி அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2022, 1:43 PM IST
Highlights

மதவாதிகள் எனக்கு எதிராக எத்தனை சதிகளில் ஈடுபட்டாலும் அவர்களின் நோக்கம் நிறைவேறாது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.   தாங்கள் மூளை இல்லாதவர்கள் என்பதை தொடர்ந்து மதவாதிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்

மதவாதிகள் எனக்கு எதிராக எத்தனை சதிகளில் ஈடுபட்டாலும் அவர்களின் நோக்கம் நிறைவேறாது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.   தாங்கள் மூளை இல்லாதவர்கள் என்பதை தொடர்ந்து மதவாதிகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

தான் பிடிஆருடன் வங்கியில் பணியாற்றிய நபர் என்றும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொருளாதார அறிவில் பின் தங்கியவர் என்றும் அதனால் அவரை வங்கி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கிவிட்டது என்றும், வெளிநாட்டுக்காரர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் இவ்வாறு விமர்சித்துள்ளார். 

திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக திமுக இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது, தமிழக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் பாஜக வினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார், இது ஒருபுறம் உள்ள நிலையில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை குறிவைத்து பாஜகவினர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.  பிடிஆர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கேள்விமேல் கேள்விகளால் துளைத்து வரும் நிலையில் அவருக்கு எதிராக பாஜகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் வெளிப்பாடாக ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது பாஜக வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர், இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது, அண்ணாமலையின் ஏற்பாட்டின் பேரில் தான் செருப்பு வீசப்பட்டது என்பதற்கான ஆதாரமான தொலைபேசி ஆடியோ ஒன்றும் வெளியானது.

அன்றுமுதல் அண்ணாமலை பிடிஆர் இடையேயான கருத்து மோதல் தொடர்கிறது. அண்ணாமலை குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன்,  ஆடு எமோஜியை பதிவிட்டு, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசியக்கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலணி வீசுவது, அவதூறு பரப்புவது என கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது கூட்டத்தால், சாதாரண ஒரு விவசாயிமகனாக என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், பிடிஆர் தியாகராஜன் அளவிற்கு தரம் தாழ விரும்பவில்லை என்றும், தனது செருப்புக்கு கூட பழனிவேல் தியாகராஜன் நிகரில்லை என அண்ணாமலை விமர்சித்தார். அண்ணாமலையில் இப்பேச்சு  திமுகவினரை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது, பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  ராமன் என்பவரின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ அமெரிக்காவின் புளோரிடாவில் எடுக்கப்பட்டது போல தெரிகிறது, அந்த வீடியோவில் ஒரு வெளிநாட்டு நபர் பேசுகிறார், அவர், நான் பிடி ராஜன் உடன் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட்  வங்கியில் பணியாற்றினேன், அவருக்கு  பொருளாதார அறிவு குறைவாக இருந்தது, இதனால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என அந்த நபர் கூறுகிறார், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சீண்டும் வகையில் அமைந்துள்ளது.  இந்நிலையில் இந்த  வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,

மதவாதிகள் மூளை அற்றவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர், போலியாக யாரோ ஒரு  வீடற்ற ஒரு நபரை அழைத்து வந்து எனக்கு எதிராக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள், அதில் என் பெயர், நான் பணியாற்றிய வங்கி, அதில் என் பொறுப்பு கூட  அந்த நபரால் சரியாக சொல்ல முடியவில்லை என அவர் நகைப்புடன் தெரிவித்துள்ளார்.

பிடிஆர் பழனிவேல் ராஜன் சர்வதேச அளவில் பிரபலமான வங்கியில் முக்கிய பதவியை வசித்தவர் ஆவார். பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் மற்றும் பிஎச்டி பட்டம் பெற்றவர் ஆவார், எம்.ஐ.டியில் எம்பிஏ பட்டம் பெற்றவராவார்.

 

Proving again that normal brains can't exist in cultists, this fake profile gets some homeless dude to say something allegedly against me, BUT he can't get:

My name
Bank's Name
My Job Title

Correct🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

Check out the morons that like/retweet before it's deleted upon complaint pic.twitter.com/IqtqJkvsYY

— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai)

பின்னர் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் 7 ஆண்டுகள்  ஆப்ஷோர் கேட்டல் மார்க்கெட் பிரிவின் தலைவராகவும் இருந்தவர் ஆவார்.பின்னர்  ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் நிதியியல் சந்தை பிரிவில் சீனியர் மேலான் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் ஆவார்.

வங்கிகளில் சிறப்பாக செயலாற்றிய அவர் தமிழக நிதியமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் தமிழகத்தின் கடன் சுமையை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை பெற மத்திய அரசிடம் போராடு வருகிறார். இந்நிலையில்தான் அவருக்கு எதிராக இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு  வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!