மியூசுவல் பண்ட் முதலீடும் கட்டுக்கதைகளும்

First Published May 4, 2018, 11:40 AM IST
Highlights
myths about mutual fund investment


முதலீடு செய்வதில் மியூசுவல் பண்ட் பற்றி இதற்கு முந்தைய கட்டுரையில் பார்த்தோம். ஆனாலும் மியூசுவல் பண்ட் முதலீடு குறித்து ஒரு சில கட்டுக்கதைகள் எப்போதும் உண்டு. அப்படியான பொய்யான தகவல்கள் என்னவென்று இதில் பார்க்கலாம்.

கட்டுக்கதை:1 மிக அதிக அளவு பணம் கொண்டவர்கள் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும்

இது ஒரு தவறான கருத்து. மியூசுவல் பண்ட்களில் முதலீடு செய்ய அதிக பணம் தேவையில்லை. மாதந்திரம் ரூபாய் 500, 1000 என இருந்தாலே போதுமானது. ரூ.500 இருந்தால் ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களிலே(ELSS) அல்லது ரூ. 1000 இருந்தால் சீரான முதலீட்டு திட்டத்திலே (SIP) முதலீடு செய்யலாம்.

 கட்டுக்கதை 2: உயர்ந்த மதிப்பிடப்பட்ட மியூசுவல் பண்டை வாங்கினால்தான் அது சிறந்த வருமானத்தை தரும்.

மியூசுவல் பண்ட்டின் மதிப்பு காலத்திற்கு ஏற்ப நிதி மேலாண்மை செய்வதன் அடிப்படையில் மாறக்கூடியது. உயர் மதிப்பு கொண்ட பண்ட்டில் முதலீடு செய்துவிட்டால் அதை பராமரிக்க அவசியம் இல்லையென நினைக்கலாம். ஆனால் முதலீடு மதிப்பு மிக்க மியூசுவல் பண்ட்டில் முதலீடு செய்தால் அது என்றென்றைக்கும் உயர் மதிப்பீட்டில் இருக்கும் என இருக்கமுடியாது. மேலும் மியூசுவல் முதலீடு செய்யும் போதோ அல்லது முதலீட்டை விற்கும் போதோ தொடர்ந்து பங்குச்சந்தையில் நிலவரத்தை கண்காணித்து வர வேண்டும்.

கட்டுக்கதை 3: மியூசுவல் பண்ட் முதலீடு என்பது பங்குகளில் மட்டுந்தான்.

மியூசுவல் பண்ட் முதலீடு என்பது பங்குகளில் மட்டும் செய்யப்படுவதில்லை. மாறாக பங்கு மற்றும் கடன் பத்திரங்களும் கலந்துள்ள முதலீட்டு திட்டங்களிலும்  செய்யப்படுகின்றன.

கட்டுக்கதை 4: முதலீடு செய்ய டிமேட் கணக்கு அவசியம் தேவை.

மியூசுவல் பண்ட்டில் முதலீடு செய்ய டிமேட் கணக்கு தேவையில்லை. முதலீடு செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகைகான காசோலையை இணைத்து உங்கள் நிதி ஆலோசகரிடமோ மியுசுவல் பண்ட் நிறுவனத்திடமோ கொடுத்தாலே போதுமானது

 

click me!