Yoga : மனம் வலுப்பெற, உடல் எடைக் குறைய உதவும் யோகாசனங்கள்!

By Dinesh TG  |  First Published Sep 13, 2022, 6:28 PM IST

யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒருவகை கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலையை பயிற்றுவிக்கிறது. நம் உடலும் மனமும் வலுப்பெறவும், நாட்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யவும் யோகாசனங்கள் பெரிதும் உதவுகின்றன.
 


சில முக்கிய யாகாசனங்களை இங்கு பார்க்கலாம்.

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 12 ஆசனங்களை கொண்டது. வேலை நிமித்தம் காரணமாக காலையில் யோகாசனங்கள் செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யலாம். இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படும். நீரழிவு வருதற்கான காரணிகளைக் முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. உடல் தசைகளை வலுபெறச் செய்கிறது. ஹைபர்டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதை கட்டுப்படுத்துகிறது. கீழ் முதுகு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி ஆகியவற்றை வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சூரிய நமஸ்காரம் ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

மூச்சுப் பயிற்சி



மன அமைத்திகும், மன அழுத்தத்திற்கும் நிரந்தர நிவரணம் தரும் மூச்சுப் பயிற்சியை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது இதில் குறிப்பிட்டது போல மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மனது ஒருநிலை அடையும்.

தவறான கெட்ட எண்ணங்கள் தோன்றுவதைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்படைவதோடு, நீங்கள் செய்யும் வேலையில் கவனத் திறனையும் மேம்படுத்தும். மேலும் கோவம், பயம், பதட்டம் அனைத்தையும் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!

உடல் எடைக் குறைய சலபாசனம் செய்யலாம். பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய ஆசனம் புஜங்காசனம் (கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ப்பது நல்லது) தலைவலி போக்க சஷங்காசனம் செய்யலாம். முதுகு, கால்களுக்கு வலு சேர்க்க: வஜ்ராசனம் செய்யலாம். இடுப்புச் சதையைக் குறைக்க வக்ராசனம் மிகவும் உதவும்

click me!