மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது பலர் சொல்லி கேட்டிருப்போம், அதை நிதர்சனமாகவும் பார்த்திருப்போம். தமிழ்நாட்டில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும், தமிழக அரசு மது விற்பனையை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நம்முடைய சமூகத்தில் மது ஒரு கெட்டது செய்யும் ஒரு பானமாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் மதுவின் பயன்பாடு பல்வேறு வகையில் நன்மையையும் தருகிறது. மதுவின் தேவை உடல்நல பிரச்னைகளுக்கு தீர்வும் தருகிறது. இதுகுறித்து விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
உயிரையும் காப்பாற்றும்.
நம்மில் பலருக்கும் மது உயரை கெடுக்கும் என்பதை மட்டுமே அறிந்து வைத்திருக்கும். ஆனால் அளவான மதுப் பழக்கம் உடலில் நல்ல கொழுப்புக்கான தன்மையை அதிகரிக்கிறது. இதனால் இருதய ஆரோக்கியம் வலு பெறுகிறது. போதுமான வகையில் மதுவை அருந்துவது இருதயம் சார்ந்த பிரச்னைகளை விரட்டி விடுகிறது. இன்னும் பல உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு அளவான மதுப் பழக்கம் தீர்வாக உள்ளது.
சளி தொந்தரவு இருக்காது
நிறையபேர் சொல்லி கேட்டிருப்போம். சளி, வரட்டு இருமல், நிறைந்த ஜலதோஷம் போன்ற பாதிப்பு இருக்கும் போது கொஞ்சம் மது குடித்தால் ஆசுவாசமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். சிவப்பு தேறலிலுள்ள மருந்து பண்புகள் ஜலதோஷத்துக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியதாக உள்ளது. மேலும், சிவப்பு தேறலை அருந்துவதன் மூலம் மூக்கு அடைப்பு, தொண்டைப் புண், இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு நிவர்த்தி அளிக்கிறது.
இருதயம் நலன்பெறும்
இருதயத்துக்கு வோட்கா மற்றும் தேறல் இரண்டும் ஆரோக்கியம் வழங்கக்கூடதாக உள்ளது. ஒருவேளை இருதயத்துக்குள் ஏதேனும் அழற்சி பிரச்னை ஏற்பட்டால், அதை எதிர்த்து போரிட தேறலின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது. மேலும் வோட்கா மற்றும் தேறலை அளவுடன் குடிப்பதால் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படுகிறது.
தாம்பத்யம் வலுப்பெறும்
போதுமான அளவு மதுப் பழக்கம் கொண்ட ஆண்கள், தாம்பத்ய உறவில் நீடித்த சுகம் காண்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு மிதமான குடிப்பழக்கம் உதவும். எனினும் இந்த மது அதிகமானால் ஆண்மை குறைவு ஏற்படும் என்பது குறித்து தெரிந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான ஆய்வு ஆண்களை மையபடுத்தி எடுக்கப்பட்டதால், இந்த முடிவு வெளியாகியுள்ளது. மதுப் பழக்கம் கொண்ட பெண்கள் தாம்பத்யத்தில் ஆர்வம் கொண்டிருப்பது குறித்து எந்த ஆய்வுமில்லை.
Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!
உடல் எடையை குறைக்கலாம்
திராட்சயை வைத்து தயாரிக்கப்படும் சிவப்பு தேறலை, போதுமான இடைவெளியுடன் எடுத்துக் கொள்வது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. குறிப்பிட்ட சில தேறல் சேர்மங்கள் மூலம் கல்லீரலை காப்பதோடு மற்றும் அதிகளவில் உடலளவில் சேர்ந்த கொழுப்பையும் குறைக்கிறது. சிவப்பு தேறலை அருந்துவது நினைவாற்றாலை அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தவிர இது வலுவான எலும்புகள் பெறவும் வழி வகுக்கிறது.